“ இராமன் சீதாவை தவிர எந்த பொண்ணையும் பார்வையால் கூட தீண்டியதில்லை.. தன்னை காண வந்த மண்டோதரி நிழலை கூட ஏறிட்டு பார்க்காமல் அதோடு அந்த நிழல் தன்னை தீண்டாமல் காத்து ஏகபத்தினி விரதனாக வாழ்ந்தவன்...” என்று பெருமையாக இருந்தது...
ஆனால் அவனுமே தன் மனைவியை நம்பாமல் ஊர் பேச்சை கேட்டு சீதையை தீக்குளிக்க வைத்தவன் இல்லையா?? ... என்னதான் ஊர் வாயை அடைக்க என்றாலும் அவன் தீக்குளிக்க சொன்னதாலயே அவன் மனைவியை சந்தேகிக்கறான்.. என்றல்லவா ஆனது?? ...
அடிப்படை நபிக்கையே இல்லாமல் எப்படி அவன் ஒரு மனைவிக்கு நல்ல கணவனாக முடியும்?? ம்ஹும்ம் I hate Rama too… “ என்று தன் மனதுக்குள் விவாத மன்றம் நடத்தினாள்...
சிறிது நேரம் தனக்குள்ளே வாதிட்டவள் பின் ஒரு முடிவும் கிடைக்காததால் திரும்பி ஜனனியை பார்க்க அவளோ பவித்ராவின் மடியில்
...
This story is now available on Chillzee KiMo.
...
சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்...
பவித்ராவும் எல்லாரிடமும் கலகலப்பாக பேச, அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி...
பின் சாப்பாட்டு பந்தி ஆரம்பிக்க, இன்றைய முறையில் டேபில் சேர் இல்லாமல், பந்தி பாய் விரித்து அனைவரும் தரையில் அமர, வாழை இலை போட்டு, அனைத்து அசைவ உணவுகளும் பரிமாறப்பட்டது...