(Reading time: 12 - 23 minutes)

நல்லது..நீங்க பேசிட்டு இருங்க..நான் இதோ வந்துடுறேன்”,என்றவரோடு அவர் மனைவியும் உள்ளே செல்ல ரினிஷா அப்போதும் பேசுவதற்கான எந்த முயற்சியையும் எடுத்ததாய் தெரியவில்லை.

ரினி பேபி..”

இந்த ஒரு வார்த்தைக்காகவே காத்திருந்தது போல் சட்டென அழுதிருந்தாள் ரினிஷா.சிறிதும் யோசிக்காது அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் கண்களைத் துடைத்துவிட்டவாறு கன்னத்தை கைகளில் ஏந்திக் கொண்டான்.

பேபி..யூ ஆர் மேக்கிங் மீ சேட்..”

சாரி ரேஷ்..”

பேபி..”

இல்ல ரேஷ் உங்ககிட்ட சொல்லிட்டு வந்திருக்கணும் ஆனா நானே சமாளிச்சுருவேன்னு நம்பிதான் கிளம்பி வந்தேன்.நினைச்ச மாதிரியே அப்பா அம்மா புரிஞ்சுகிட்டாங்க ஆனா அண்ணா இப்படி கோபப்படுவான்னு நான் நினைக்கவே இல்லை.

பொறுமையா பேசி பார்த்து சண்டை போட்டு அழுதுனு என்னால முடிஞ்ச அத்தனையும் பண்ணிணேன் ஆனாலுப் அவன் அத்தனை உறுதியா இருக்கான்.அதைவிட பயம் அவனோட கண்மண் தெரியாத கோபத்துனால உங்களுக்கு எதுவும் பிரச்சனை கொடுத்துருவானோனு தான் ரொம்ப பயந்துட்டேன்.

நீங்களா கால் பண்ணிடுவீங்களோனு தான் நம்பரையும் ப்ளாக் பண்ணி வச்சேன்.உங்க கம்பேக் எவ்ளோ முக்கியம்னு எனக்குத் தெரியும் ரேஷ்..சின்னதா ஒரு விஷயம் நெகட்டிவா உங்க மேல விழுந்தாலும் க்ரியரே ஸ்பாயில் ஆய்டும்.

அதனால மட்டும்தான் இவ்ளோ பையத்தியகாரத்தனம் பண்ணிட்டேன்.பட் இப்பவும் எனக்கு நம்பிக்கை இருக்கு அவனை கண்டிப்பா சம்மதிக்க வச்சுருவேன்.ட்ரஸ்ட் மீ..”

ரினி பேபி..இந்த உலகமே எதிர்த்து நின்னா கூட உன்னை என்னால விட்டுத்தர முடியாது.உங்க அண்ணன்கிட்ட சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு.நீ தேவையில்லாம எதைப் பத்தியும் யோசிச்சு உன்னை போட்டு குழப்பிக்காத..”

ம்ம்

என்ன வெறும் ம்ம்..சீயர் அப் டா..ஒரு நிமிஷம் இரு ஜீ பேசணும்னு சொன்னா..”,என்றவன் அவளை அழைத்து போனை ரினிஷாவிடம் கொடுத்தான்.

ஜி!!”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.