(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

செய்ய பட்டிருப்பதை அறிந்து ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யும் ஜிம்னஸ்ட் போல வளைந்து நெளிந்து பல்டி அடித்து கொண்டு லேசர் லைட்யில் பூந்து பூந்து சென்று பாக்ஸில் சேப்பாக வைக்க பட்ட ஸ்வார்டை எடுக்கும் போது செக்கியூரிட்டி அலாரம் அடித்தது அதை உடனே எடுத்து பையில் போட்டு கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடினர் அங்கிருந்து தப்பித்து செல்ல ரோப்பின் மூலமாக கீழே சாரா இறங்க ஆரம்பித்தாள் செக்கியூரிட்டி போலீஸ் நீரவை தாக்கி கொண்டிருந்தனர் அதில் ஒருவன் ரோப்பை ஷூட் செய்ய ரோப் முற்றிலுமாக அறுப்பட்டது நீரவ் வந்து சாரவின் கையை பிடிப்பதற்குள் பேலன்ஸ் இல்லாமல் சாரவின் ஒரு பக்க ரிக்கிங் வையர் அறுப்பட்டு கீழே விழுந்து தொங்கினாள் சாரா ரிக்கிங் வயர் அங்கும் இங்குமாக ஆடியதால் சுவரில் இடிப்பட்டால் சாரா இதை பார்த்த மன்வீர் அவளை காப்பாற்ற ஓடி வர செட்டிலிருந்த அனைவரும் சாரா சாரா…… என்று கத்த யோவ் ஸ்டண்ட் மணி என்ன நடக்குது சாராவ போய் காப்பாத்து போயா போ என்று ஷாமி கூச்சலிட எதுவும் புரியாமல் நீரவ் திணற இவையனைத்தும் ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருக்க சாரவின் வயர் முழுதாக அறுபட்டு கீழே விழ போனால் சாரா ஐயோ …….என்று அனைவரும் அலற யாரோ ஒருவன் திடீரென சூப்பர் மேன் போல ஓடி வந்து பாய்ந்து சாரவை கட்டி பிடித்து உருண்டு காப்பாற்றினான் அவன் யார் என்று அனைவரும் பார்த்து கொண்டிருக்கும் பொழுது மயங்கிய நிலையில் இருவரும் மேலே பார்த்த படி விழுந்தனர் அப்போது தான் தெரிந்தது சாரவை காப்பாற்றியது மன்வீரும் இல்லை நீரவும் இல்லை ஸ்டண்ட் மணியும் இல்லை அவன் முன்னாள் காதலன் வேத்தென்று.

யூனிட்டில் இருந்த அனைவரும் பதறியடித்து கொண்டு வந்து இருவரையும் தூக்கினர் அப்பொழுது மியூசியம் செட்டின் எதிரே உள்ளே மாடியிலிருந்து ஒருவன் சை மிஸ் ஆயிடுச்சே என்று வெறுப்புடன் அவனது கையை அடித்து கொள்ள அதை தற்செயலாக பார்த்து விட்டான் மன்வீர் அவனுக்கு தெரிந்து விட்டது சாரவை கொலை செய்ய துடிப்பது இவன் தான் என்றும் ரிக்கிங் வயரை லூசாக கனெக்ட் செய்து சாரா கீழே விழும்படி செட் செய்தது இவன் தானென்று சாரவுக்கு பெரிதாக அடி பட வில்லை சற்று மயக்க நிலையில் தான் உள்ளால் என்பதை கணித்து இப்போது இவனை பிடிக்காமல் போனால் நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் விடை கிடைக்காமல் போய்விடும் என்பதை உணர்ந்து அவனை பிடிக்க ஓட்டத்தை ஆரம்பித்தான் மன்வீர். இந்த நேரத்தில் ஆம்புலன்ஸ்சும் ஸ்பாட்டுக்கு வந்து சேர இருவரையும் தூக்கி போட்டு கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஷாமியும் அவனது அசிஸ்டண்ட்ஸ்சும் சென்றனர். டேய்.. பசங்களா என்னடா பண்ணிகங்க இது வரைக்கும் நம்ம ஸ்டண்ட்ல இத மாறி நடந்ததே இல்ல யாருடா எக்யூப்மெண்ட செட் பன்னது வயரிங்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.