(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

கேட்கணும் மிஸ்டர் மன்வீர் நான் இங்க டெய்லி தான் வறேன் நீங்க ரெண்டு பேரும் இன்னிக்கு வந்துட்டு என்ன எப்ப வந்தீங்க? எப்படி இருக்கீங்கன்னு? கேக்குறீங்க வாட்ட காமெடி யு நோ? என வேணு பதிலுக்கு மன்வீரை கலாய்தான் சரி இருக்கட்டும் நீங்க ரெண்டு பேரும் என்ன பண்றீங்கனு தெரிஞ்சிகலாமா?? என்று வேணு கேட்க ஓ அதுவா ஒன்னுமில சாரா வோட நெக்ஸ்ட் மூவிக்கு ஸ்டண்ட் ட்ரைனிங் கொடுக்க போறேன் அத பத்தி தான் டிஸ்கஸ் பண்ணரோம்னு மன்வீர் சொல்ல இதெல்லாம் ஒரு சிம்பிள் மேட்டர் பா ...இதுவே நான் சாராக்கு ட்ரைனிங் கொடுதேன் வெச்சிக்கோ சாரா சும்மா ஜாக்கி சான் மாறி ஏர்லயே பறந்து பறந்து சண்ட போடுவா என வேணு சீரியஸ்சாக கூறியதை கேட்ட மன்வீர்க்கு சிரிப்பை கண்ட்ரோல் செய்ய முடியாமல் ஹா ஹா ஹா… வென சிரித்து விட்டான் ஹலோ தம்பி என்ன சிரிக்குறீங்க நான் கராத்தேல பிளாக் பெல்ட்டு தெரியுமா அதுமட்டுமில்ல ஐயா காலேஜ் டைம்ல எவளோ பெரிய ரவுடி தெரியுமா அப்பறம் இந்த அபார்ட்மெண்ட்ல ஏதாவுது பிரச்சனனா முதல்ல இந்த வேணு தான் வந்து முன்னாடி நிப்பான் என கூறி காலை தூக்கி மன்வீரின் முன் வைக்க ,சரி இப்ப உங்களுக்கு என்ன வேணும் வேணு என மன்வீர் கேட்க இப்ப கேட்டீயே இது கேள்வி உனக்கும் எனக்கும் ஒரு போட்டி அதுல யார் வின் பண்ராங்களோ அவங்க தான் இன்னிக்கு சாரக்கு ட்ரைனிங் தரணும் டீலா நோ டீலா?? என வேணு மன்வீரின் முன் கை நீட்டி சேலன்ஜ் செய்ய மன்வீர் சாராவை பார்க்க இதெல்லாம் உன்னால தான் என சாரா கண் அசைவிலேயே மன்வீரை முறைக்க எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையன கைகளை விரித்து ம்….. என உதட்டை பிதுக்கி கொண்டே மன்வீர் செய்கையில் பதில் அளித்தான்.என்ன மன்வீர் ரெடியா ?? நாம ஆர்ம் ரெஸ்ட்லிங் பண்லாமா என வேணு கேட்க ஓ தாராளமா பண்லாமே சார் என மன்வீர் கூற ஓ கே கம் ஆன் இன்னிக்கு இந்த வேணு யாருன்னு எல்லாரும் பாக்க போறீங்க என அவன் ஓவராக சவுண்ட் விட்டு கொண்டிருக்க ஜிம்மில் இருந்த ஒருவன் டேய் விஷயம் தெரியுமா உனக்கு? வேணு சண்ட போட போரான மன்வீரோட வாங்க போய் அத பாக்கலாம் என படையை திரட்டி கொண்டு வேணுவின் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர் இன்னிக்கு நம்ம எல்லார்க்கும் சம என்டேர்டைன்மெண்ட் காத்திருக்குடா இந்த வேணு பையன் நம்மல எப்படிலாம் கலாய்குரான் அவன் பெரிய ப்ருஸ் லீ மாறி சீன் போட்டுட்டு இருந்தான் இன்னிக்கு தெரியும் அவனோட சுயரூபம் என அபார்ட்மெண்ட் வாசிகள் வேணுவின் வெட்டி சீனுக்கு முடிவு கட்ட ஆர்வமாக இருந்தனர்.பெரிய மேஜையில் மன்வீரும் வேணுவும் ஒருவர் கையை ஒருவர் இறுக்கமாக பிடித்து கொண்டிருந்தனர் சாரா நடுவர் போல நடுவில் நின்று கொண்டு கம் ஆன் மன்வீர் கம் ஆன் என மன்வீரை சியர் அப் செய்து கொண்டிருக்க அதை பார்த்து காண்டானா வேணு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.