(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

மன்வீரை தோற்கடிக்க உரே ரே ரே......... என கத்தி அவன் கையை சாய்க்க முயற்சி செய்ய ஆனால் மன்வீர் பிடித்த பிடியில் கை விரல்கள் நொறுங்க அவனால் வலி தாங்க முடியாமல் யம்மா........ வென கதற அவன் கையை இரண்டே நொடியில் சாய்த்து விட்டான் மன்வீர். வியர்வை சொட்ட சொட்ட சேரில் இருந்து கீழே விழுந்த வேணுவை பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்தனர் அபார்ட்மெண்ட் வாசிகள்.ஏய் வேணு இனிமே எங்க கிட்ட வெட்டி சீன் போட்டு ரீல் விட்ட அவலதான் ஓட விட்டுர்வோம் மன்வீர் சார் சூப்பர் கீப் இட் அப் இத மாறி எங்களுக்கு அடிக்கடி என்டேர்டைன்மெண்ட் பண்ணுங்க வி ஆர் வைட்டிங்...என வேணு முன் மன்வீரை சிலர் புகழ்ந்து தள்ளினர் .இவனுங்கள எவன்டா கூப்டது நம்ம இமேஜ இப்டி டேமேஜ் ஆயிடுச்சே சை... சரி எப்படியாவது மைண்டைன் பண்ணுவோம் என மைண்ட் வாய்சில் பேசி கொண்டே வேணு கைஸ் நீங்க நினைக்குற மாறி நான் உண்மையிலேயே தோக்கலா பாவம் சின்ன பையன் மன்வீர் அதுவும் சாரா முன்னாடி ஜெயிக்கலனா சாரா நீ பாடிகார்ட்டா இருக்க தகுதியே இல்லன்னு சொல்லி வேலைய விட்டு தூக்கிட்டா இந்த சின்ன பையனோட வாழ்க்க என்ன ஆகுறது?? என சென்டிமென்ட் டைலாக் பேசி அவர்களை கவர் செய்ய பார்த்த வேணுவை ஓ ஓ ஓ அப்படியா கதை ரொம்ப மோசமா இருக்கு வேணு இந்த ரீல வேற யார் கிட்டயாவுது ஓட்டுப்பா நாங்க கிளம்புரோம் பாய் பாய் என வேணுவை கலாய்த்து விட்டு அப்பார்ட்மெண்ட் வாசிகள் சிரித்து கொண்டே கிளம்பினர்.என்ன ?? வென்று தன்னை உற்று பார்த்து கொண்டிருந்த சாராவை பார்த்து ஒரு பக்க புருவத்தை உயர்த்தி மன்வீர் கேட்க சூப்பர் ர் ர் .....மன்வீர் கலக்கிட போ நல்லா பல்பு கொடுத்த அந்த லூசுக்கு என சொல்லிக்கொண்டே உணர்ச்சி வேகத்தில் ஓடி வந்து சாரா மன்வீரை கட்டி பிடிக்கும் மோது கீழே கிடந்த தம்புல்ஸ்யில் தடுக்கி மன்வீர் சாரவோட கீழே விழுந்தான் சாரவின் தலை முடி மன்வீரின் முகத்தில் கொடி போல படர்ந்து இருந்தது இருவரும் கட்டி பிடித்த படி சில நொடிகள் அசையாமல் இருந்தனர் இதை ஓரமாக நின்று எட்டி பார்த்து கொண்டிருந்த வேணு அட சே நான் கஷ்டப்பட்டு பிரக்கெட் போட்ட இவன் ஸ்கோர் பண்ணிட்டு போய்ட்டானே சை......என தன் கையை அவனே அடித்து கொள்ள மறுபடியும் வலியால் மம்மி என கதறினான் வேணு. சாரா.... டைமாச்சு நாமா போலாமா என மன்வீர் சாராவை கூப்பிட ஓ போலமே என அவன் மேலிருந்து எழுந்து தன் தலை முடியை சரி செய்து கொண்டே அவசர அவசரமாக நடந்தால் சாரா.

கோ கார்ட் கிளப்பில் ரேஸ் காருகள் ஒன்றை மற்றொன்றை வேகமாக முந்தி கொண்டு சேஸ் செய்து கொண்டிருந்தன அதை ஆழமாக கவனித்து கொண்டிருந்தாள் இனியா ஹாய்!! இனி எப்படி இருக்க? பாத்தே ரொம்ப நாள் ஆச்சு இப்ப தான் என் நியாபகம் உனக்கு வந்துச்சா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.