(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

கனெக்ஷன்லாம் கொடுத்தது சொல்லுங்க டா வாயில என்ன கொழுக்கட்டயா வெச்சிற்கீங்க என மணி தன் ட்ரைனர்களை திட்டி கொண்டிருக்க அண்ணே.. எப்பயும் போல நாங்க தான்னே பண்ணோம் ஆனா கூட புதுசா ஒரு பையன் வந்தான் அவனுக்கும் ஸ்டண்ட்லாம் ரொம்ப இன்டெர்ஸ்ட்னு சொன்னா இத பத்தி கத்துக்கலாம்னு வந்தான் சம்பளம் கூட வேணாம்னு சொல்லிட்டான் நாங்களும் ஆளு எஸ்ட்ரா வா இருந்தா வேல கொஞ்சம் சீக்கிரமா முடியுமேனு நினைச்சு உங்க கிட்ட கேக்காமயே சேத்து கிட்டோம்னா ஒரு வேல அவன் எதாச்சும் தப்பு பண்ணீர்களாம்னா என மாறி மாறி அவர்கள் கூறியதை கேட்ட மணி டென்ஷனாகி சோம்பேறி பசங்களா என் மூஞ்சுலயே முழிகாதிங்கடா ஓடி போய்டுங்டா வென செட் அதிரும் படி கத்தினான்.

மன்வீர் தன்னை நோக்கி ஓடி வருவதை கண்ட அவன் தன் ஓட்டத்தை தொடர்ந்தான் டிஸ்க்கவிரி சேனலில் வரும் புலியும் மானும் போல இருவரும் மூச்சு விடாமல் ஒவ்வொரு மாடியிலும் வேகமாக ஓடி கொண்டிருந்தனர் ஒரு கட்டத்தில் கொலையாளி பில்டிங்கின் இறுதியான மாடியை அடைந்து தப்பி செல்ல வழி இல்லாமல் நின்று கொண்டிருக்க என்ன பாக்குற ….? எப்படி எஸ்கேப் ஆகுறதுன்னு யோசிகிறியா? என்ன நீ மட்டும் வந்தூர்க்க உன் பிரின்ட்டு ஜெய்ய காணும் ரெண்டு பேரும் சேந்து தான டாஸ்க்க கம்பிளிட் பண்ணுவீங்க ஓ அவன் தான் இப்ப இங்க இல்லையே சோலோவா டாஸ்க்க பண்ண வந்துட்டியா என்று அவன் பின்னெ நின்று மன்வீர் புதிர் போட கேப் அணிந்து கொண்டு மூக்கு வரை கவர் செய்து கொண்டிருந்த அவன் பின்னே திரும்பி ஆமா டாஸ்க் பண்றது உண்மதான் ஆனா அந்த டாஸ்க்க நான் மட்டும் தான் பண்றன் என் கூட சேந்து யாரும் பண்ணல மிஸ்டர் மன்வீர் நீ மட்டும் இல்லனா என் டாஸ்க் எப்பயோ கம்பிளிட் ஆயிருக்கும் என்று அவன் தெனவட்டாக பதில் அளிக்க ஓ அப்படியா…பரவால என் பேர்லாம் தெரிஞ்சி வெச்சிற்க அப்ப நீ யாருன்னு நான் தெரிஞ்சிக்குற நேரம் வந்துர்ச்சு என சொல்லி கொண்டே அவனை பின்னாலிருந்து தாக்கினான் மன்வீர் இறுக்கமாக அவனை கட்டி பிடித்து அவன் முட்டியில் ஒரு கிக் அடித்தவுடன் அவன் கீழே விழுந்தான் பதிலுக்கு அவனும் மன்வீரின் காலை பின்னாலிருந்து இழுக்க மன்வீர் அவன் மேல் விழ இருவரும் மாறி மாறி உருண்டனர் பின் மன்வீர் அவன் வயிற்றின் மீது ஏறி அமர்ந்து அவன் அணிந்திருந்த மாஸ்கை உருவினான் சொல்லுடா.. சொல்லு உன்ன அனுப்புனது யாரு ? எதுக்கு சாரவ கொல்ல ட்ரை பண்ற ? நீ செஞ்ச காரியத்துனால இன்னொரு உயிர் அநியாயமா போயிடுச்சு தெரியுமா? என மன்வீர் கூற ஏய்…..ஆபிசர் மன்வீர் போதும் நிறுத்து ஒருத்தன் கடைச்சான்றதனால அவன் மேல உனக்கு தெரிஞ்ச எல்லா கிரிமினலஸ் பேரலாம் வெச்சி லிங்க் பண்ணாத இந்த மிரட்டல லாம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.