(Reading time: 53 - 106 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

போய் பாதுகாப்பு கொடுக்க பாடிகார்ட்ஹா வந்தன் பாரு என்ன நினைச்சா எனக்கே வெறுப்பா இருக்கு சை....... இனி உன் கூட என்னாலா இருக்க முடியாது குட் பை சாரா என கூறி விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினான் மன்வீர். சாரா எதுவும் பேசாமல் அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தால்.

கார்மேகங்கள் வனத்தில் சூழ்ந்தது குளிர்ந்த காற்று சில்லென்று வீசியது இடி இடிக்கும் சத்தம் பூமியை பிளப்பது போல ஒலித்தது அடை மழை பெய்ய போகிறது என்பதை உணர்ந்த அந்த ஏரியாவின் மக்கள் கட கடவென வீட்டுக்குள் சென்று கதவை மூடினர் கடை காரர்கள் கடைகளின் ஷட்டர்களை இழுத்து வேகமாக மூடினர் தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறு பிள்ளைகள் தங்களது கிரிக்கெட் பேட், பால், கோலி, கேரம் போன்றவற்றை சுருட்டி கொண்டு வீட்டை நோக்கி ஓடினர் மொத்தத்தில் அந்த தெருவே மழையில் நனையாமல் இருப்பதற்காக செய்த செயல்கள் பரபரப்பாகா காணப்பட்டது. இதற்கு நடுவே எதுவும் தன்னை சுற்றி நடக்காதது போல அந்த தெருவில் மெய் மறந்து நடந்து வந்து கொண்டிருந்தாள் சாரா. ஏய் சீக்கிரம் வாடா.. என ஒரு சிறுவன் அவளை இடித்து விட்டு செல்கிறான் ஸ்கூட்டியில் சென்ற ஒருவர் பாம் ....பாம்...வென ஹாரன் அடிக்க அதை கவனிக்காமல் நடந்த சாராவை யம்மா யம்மா ஓரமா போமா என்ன வீட்ல சொல்டு வண்டியா இங்கேயே மழை வர போதுன்னு அவன் அவன் ஓடிட்டு இருக்கான் நீ வேற ஸ்லோ மோஷன்ல நடந்துட்டு இருக்க என அவளை திட்டி கொண்டே கிராஸ் செய்து கொண்டிருந்தான். மழை ஜோ... வென பெய்ய ஆரம்பித்தது சிறுவர்கள் மூவர் பெரிய பிளாஸ்டிக் கவரை தலையில் பிடித்து கொண்டு ஓடினர் இடுப்பில் வைத்திருக்கும் தன் குழந்தையை தான் கட்டியிருக்கும் சேலையில் மூடி கொண்டு அந்த குழந்தையின் தாய் ஓடி கொண்டிருக்க தன் தோளில் இருக்கும் துண்டை எடுத்து தலையில் கட்டி கொண்டு பெரியவர் ஒருவர் ஓடினார் ஆனால் சாரா தலை முதல் கால் வரை மழையில் நனைந்து கொண்டே நடந்தால் காற்றில் அவளது ஹூடியும் தலையிலிருந்து கழன்றது சேரும் சகதியும்மாக அவளது ஜீன்ஸ் நிறம் மாறியது குண்டும் குழியுமான சீரற்ற சாலையில் கறுக்கு முறுக்கென இருக்கும் தெருவில் அவளின் பூட்ஸ் மாட்டி கொள்ள அதை ஒரே பிடியில் தூக்கி போட்டு விட்டு வெறும் காலுடன் நடக்க ஆரம்பித்தாள் நீண்ட தூரம் சென்ற பின் மழை நின்றது ஆனால் சாராவால் நடக்க முடியவில்லை காலின் வலி தாங்க முடியாமல் அருகே இருந்த புல் வெளியில் ஓரமாக இருந்த மரத்தின் கீழ் முட்டி போட்ட படி முகத்தை மூடி உட்கார்ந்து இருக்க சல சல வென மறு படியும் மழை கொட்டியது ஆனால் இந்த முறை அவள் மேல் மழை துளிகள் படவில்லை அவள் நிமிர்ந்து பார்த்த போது அவள் நனையாமல் இருப்பதற்காக அவள் மீது குடையை பிடித்து கொண்டு நின்று கொண்டிருந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.