(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

டிபார்ட்மெண்ட் ஸ்டோர்க்கு சென்றான் மன்வீர் ம் ம் ம்.....இந்த சீஸ் எங்க இருக்கு என்று அவன் கண்கள் அலைமோதி கொண்டிருக்க ஸ்டோரில் இருந்த மற்றவர்கள் சாராவா  பாத்தியா பாத்தியா யாரோட இருக்காவென்று மாறி மாறி கிசு கிசுத்து கொண்டிருந்தனர் இதை கவனித்த மன்வீர் பில்லிங் சென்டரில்  நின்று பில் போடும் மோது சார்….நீங்க பாத்தீங்களா?? என்று டிபார்ட்மெண்ட் ஸ்டார் எம்ப்ளாயீ மன்வீரை ஹஸ்கி வாய்சில் கேட்க என்ன பாத்தீங்களான்னு கேக்குறீங்க? எனக்கு புரியல என்று மன்வீர் கேட்க நம்ம சாரா மேடம் ஒரு பையோனோட கிலோஸ்ஸா இருக்குற போட்டோஸ்லாம் வெளிய வந்துருக்கு பாத்தீங்களா அது அமைச்சர் தங்கவேலு பையன்னு சொல்ராங்க ஆனா அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சு இவங்க ரெண்டு பேருக்கும் இப்பயும் அவ்பர் இருக்குன்னு பேசிக்குறாங்க பேஸ் புக் ட்விட்டர் வாட்ஸ் அப்ன்னு டாக் ஆப் தி டவுன்னே இப்ப இது தான் சார் தெரியுமா?? உங்களுக்கு எப்படி தெரியாம இருக்கும் மேடம் கூடவே இருக்கீங்க என்று கூறி கிராசரி பேக்கை மன்வீரின் கையில் கொடுத்தான்.இதை கேட்ட மன்வீர் உடனே தன் பாக்கெட்டில் இருந்த செல் போனை எடுத்து சர்ச் செய்யும் மோது சாரா வேத் இருவரும் காதலித்த பொழுது எடுத்து கொண்ட சில புகைபடங்கள் வெளியாயின ரெஸ்டாரண்ட்யில் இறுக்கமாக கட்டி பிடித்து அமர்ந்து கொண்டிருந்த போட்டோ பெர்த்டே கேக்கை மாறி மாறி முகத்தில் பூசிக்கொண்ட போட்டோ கடற்கரையில்  ஒருவர் கால் மீது இன்னொருவர் நின்று நடக்கும் போட்டோ சாரா நெற்றியில் வேத் முத்தமிட்ட போட்டோ வென அனைத்து காதலர்களும் எடுத்து கொள்ளும் வழக்கமான போட்டோவாகவே இருந்தது. கீழே கமெண்ட்ஸ் செக்ஷனில் ஸ்கிராள் செய்து பாத்த போது

சாரக்கு பாய் பிரண்ட் கண்டிப்பா இருக்ககும்னு எனக்கு அப்பயே தெரியும் சாதாரண பொண்ணுக்கே பாய் பிரண்ட் இருக்கும் போது சாரக்கு இருக்குறதுல நோ டௌப்ட்….என்றும்

சாரக்கு சிங்கள் பசங்க கடைகலயா போயும் போய் செகண்ட் ஹாண்ட்  பீச பிடிச்சிருகாங்க என்றும்….

இந்த நடிகைகளே இப்படித்தான் கெட் அப் சேன்ஜ் பண்ற  மாறி ஆள சேன்ஜ் பண்ணிட்டே இருப்பாங்க ஷேம் லஸ் பீபள் என்றும் …

இந்த மாறி இருந்த பல கமெண்ட்ஸ்கள் சாராவை தாக்கியதை பார்த்த மன்வீர் ஷாக் ஆகி விட்டான் அங்கிருந்து பட பட வென வேகமாக ஓடி வீட்டிற்கு சென்ற போது “ பாரு சாரா இதெல்லாம் யாரு பண்ணிருப்பானு நினைக்குற எல்லாம் இந்த வேத் பண்ணதா தான் இருக்கும் உங்க ரெண்டு பேரோட க்லோசான போட்டோ வேற யார்கிட்ட இருக்கும் அவன் தான் உன்ன எப்படியாவுது அடையம்னு இதெல்லாம் லீக் பண்ணிருப்பான் நான் கூட அவன் உன்ன காப்பாத்துன நினைச்சு உன் மேல ரொம்ப அக்கறையா இருக்கானேன்னு  நினைச்சேன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.