(Reading time: 45 - 89 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வெளியே அனைவருக்கும் நல்லவராகவும் உள்ளே ஒரு வேளை கெட்டவராக இருக்க கூடுமோ என்ற சந்தேககத்தை தீர்த்து கொள்ள சாரா சொன்னது போல ஆழமாக பிராசந்தை எக்ஸ்போஸ் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் மன்வீர்.

காலை 6 மணியளவிள்  நடு ஹாலில் அமர்ந்து கொண்டு பழைய பேப்பர்கள் அனைத்தையும் புரட்டி போட்டு கொண்டு எதையோ தேடி கொண்டிருந்தான் மன்வீர் அப்போது ரெஸ்ட் ரூம் செல்வதற்காக எழுந்து வந்த சாரா தன்னை சுற்றி பேப்பரை பரப்பி வைத்து கொண்டிருந்த மன்வீரை பார்த்து ஏய் மன்வீர் என்ன பண்ற காலைல??மார்னிங் டைம்ல பிரீயா இருக்கனு அபார்ட்மெண்ட்ல இருக்க எல்லா வீட்டுக்கும் பேப்பர் போட ஆரம்பிச்சுடியா புது பார்ட் டைம் ஜாப் ஸ்டார்ட் பண்ணிட்டியா? என்று அவள் மாறி மாறி கேட்க ஷூ ......கொஞ்ச நேரம் பேசாம இரு நான் கொஞ்சம் பிஸியா இருக்கன்ஆமா நேத்து படிச்ச பேப்பரோட இன்னொரு பக்கம் எங்க எல்லாம் ஒன்னோட ஒண்ணா கலந்திருக்கு என்று மன்வீர் பரபரவென கேட்க ஓ...அதுவா நான் தான் என்னோட மூவி டெத் ரேஸ் பத்தின நியூஸ் ஏதாச்சும் வந்தூர்க்காணு பாக்க பேப்பர எடுதேன்னு அவள் கூற பேப்பர் எடுதேன்னு சொல்லாத கலச்சேன்னு சொல்லு என மன்வீர் அவளை திட்ட....ஓ ஓ அப்படியா சார் சம கலாய்  சிரிச்சுட்டேன் ஈ....என மன்வீரை வெறுப்பேத்தி விட்டு அந்த பேப்பர்லாம் பொறுக்கி முடிச்சிட்டு எனக்கு நல்லா ஸ்டாங்கா காபி போட்டு கொண்டு வா ஓ கே என்று மன்வீரிடம் சொல்லி கொண்டே அவள் அருகில் இருந்த நியூஸ் பேப்பரை எடுத்து மன்வீரின் தோலை தட்டினாள் சாரா அப்போது அந்த பேப்பரை பிடுங்கி மன்வீர் பார்த்த போது சைதாப்பேட்டையை சேர்ந்த ராஜா என்பவர் வெள்ளி கிழமை இரவு 8 மணியளவில் 2 வில்லரில் அவரது வேலை விஷயமாக சென்று கொண்டிருந்த போது வண்டியில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனது அப்பொழுது எதிரே வந்த லாரியில் மோதி அடிப்பட்டு கீழே விழுந்தார் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அங்கிருந்த மக்கள் தூக்கி கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து அனுமதித்தனர் என்று நியூஸ் பேப்பரின் ஒரு ஓரத்தில் இருந்த செய்தியை கண்டான் மன்வீர்.அந்த சமயம் நியூஸ் பேப்பர் என கூவி விட்டு காலிங் பெல்லை அடித்து விட்டு சென்று விட்டான் பேப்பர் பாய் கதவை திறந்து அந்த பேப்பரை எடுத்தான் மன்வீர் வெடுக்கென்று அதை பிடுங்கினாள் சாரா என்ன பாக்குற ?என்று அவள் கேட்க எனக்கு ஒரு முக்கியமான நியூஸ் இருக்கான்னு பாக்கணும் நான் படிச்சிட்டு உன்கிட்ட தரேன் அப்பறம் நீ படி என்று அவன் கூற  எனக்கும் ஒரு முக்கியமான நியூஸ் படிக்கணும் நான் படிச்சிட்டு தரேன் அப்பறம் நீ படி என்று அவள் கூற நீதான் நியூஸ் பேப்பர்லாம் படிக்க மாட்டேன்னு சொன்னல அப்ப எதுக்கு உனக்கு என்று கிண்டலாக மன்வீர் கேட்க ஆமா  நான் இப்பயும் சொல்றன் நான் நியூஸ் படிக்க மாட்டேன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.