(Reading time: 34 - 67 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

எதையும் எதிர்பாக்கமா வருறது  தான் உண்மையான காதல் சாரா குட்டி நாளைக்கு உனக்கே ஒரு பிரின்ஸ் கடைச்சா அவன் ரிச்சா புவரானு பாக்க கூடாது உன்ன எப்பயும் ஹாப்பியா பாதுகாப்பா வெச்சிருக்கான மட்டும் தான் பாக்கணும் சரியா செல்லம் என அவள் கன்னத்தை தட்டி கமல் சொன்ன பேர்ரி டைல் ஸ்டோரியை நினைத்து பார்த்தால் சாரா.

தங்கவேலு ஐயா சொன்னதும் ஹார்பர்க்கு எங்க தல போனாரு அப்ப உங்க பிரின்ட்டு சலீமும் செக்கியூரிட்டி  இன்சார்ஜ் மயிலும் பெரிய வாக்குவாதம் பண்ணிட்டு இருந்தாங்க சலீம்  சார் எதுக்கும் இறங்கி வர மாறி தெரில  அதனால எங்க தல பாத்தாரு பக்கதுல இருந்த அசிஸ்டண்ட் ஆபீசர அடிச்சி அவங்க கிட்ட இருந்த துப்பாக்கிய எடுத்து பட்டு பட்டுன்னு சலீமையும் மயிலையும்  சுட்டுட்டாரு அப்பயே ரெண்டு பேரும் ஸ்பாட் அவுட் ஆயிட்டாங்கா அப்புறம் தல அவர்கிட்ட இருந்த துப்பாக்கிய மயில் கையில வெச்சிட்டு சலீம்மோட துப்பாக்கிய எடுத்து பயர் பண்ணி அவர் கையிலயே வெச்சிட்டாறு   உண்மைய வெளிய சொன்னா உங்களுக்கு மட்டுமில்ல உங்க குடும்பத்துக்கும் இதே நிலம தான்னு தல மிரட்டுன மிரட்டல்ல  ஆடி போய் உண்மைய சொல்லாம மறச்சிட்டாங்க அந்த அசிஸ்டண்ட் ஆபீசர்ஸ் அப்பறம் தல சொன்னா மாறி  ரெண்டு பேருக்கும் நடந்த  வாக்கு வாதத்துல கோவத்துல  திடிருன்னு மாறி மாறி சுட்டுக்குடாங்கன்னு ஒரு போலி நியூஸ்ஸ சொல்லி எல்லாரையும் நம்ப  வெச்சிட்டோம் இதான் சார் நடந்துச்சு என சொம்பி முகம் வேர்க்க வேர்க்க பயத்தில் முக்கி முக்கி மன்வீரிடம் கதையை சொல்லி முடித்தான்.

பாத் டப்பில் படுத்து கொண்டு சோப்பு நுரையில் விளையாடி கொண்டிருந்தாள் சாரா அப்பா சொன்னது போல என் வாழ்க்கைல ஒரு ரிச் பிரின்ஸ் வந்தான் ஆனா என்ன விட்டுட்டு பாதிலயே போய்ட்டான் இனி யாரு வர போற இல்ல அப்பா வேற ஒன்னு சொன்னரே உன்ன ஹாப்பியா பாதுகாப்பா பாத்துக்காரவங்க தான் உன்ன உண்மையா விரும்புற வங்கன்னு பட் அப்டி யாரு இருக்கா விக்கியா சீ ….இல்ல அவன் என் பிரின்ட் அவன் மேல காதல் வர சான்ஸ்சே  இல்ல தென் என் ரசிகர்களா ஓ… ஸ்டுபிட் சாரா பேன்ஸ் எல்லாரையும்  லவ் பண்ண முடியுமா இல்லனா இந்த பக்கத்து வீட்டு வேணுவா ஐயோ அது ஒரு ஜொள்ளு காமெடி பீஸ்  இல்ல அடிக்கடி மெசேஜ் பண்ணி தொல்ல பண்ற என் காலேஜ் பிரின்ட் பிரணவ்வா இல்ல இல்ல அவன் டைம் பாஸ்க்கு என் கிட்ட மொக்க போடுறான் வேற யாரு பேலன்ஸ் என யோசித்து ம்…. இந்த ஸ்டுபிட் சிடு மூஞ்சி மன்வீரா என சிரித்து கொண்டாள் சே சே  நோ வே என் ஸ்டேட்டஸ் எங்க அவன் எங்க   நான் சாரா வாச்சே ம்…. என்ன பெரிய சாரா அவன் இல்லனா இப்ப நான் இப்படி ஹாப்பியா குளிச்சுட்டு இருந்துர் பேனா என் அப்பா மாரி என்ன ரொம்ப கேரிங்கா பாத்துக்குறான் என்ன அடிக்கடி  இப்டி பண்ணு சாரா அப்டி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.