பண்ணு சாரான்னு எதாவுது சொல்லி தொல்ல பண்ணுவான். அவன் இருந்தாலும் தொல்லையா இருக்கு இல்லனாலும் தொல்லையா இருக்கு அவன பாக்கம பேசாம ரொம்ப போர் அடிக்குது இப்ப என்ன பண்றான் எங்க இருக்கானு தெரிலயே அந்த கதையில வர மாரி நான் தான் சின்டெரல்லாவா அந்த பேர்ரி ஏன்ஜல் தான் விக்கியா அவன் மேஜிக் மூலியமா வந்த மன்வீர் தான் என்னோட புவர் பிரின்ஸ்ஸா என்ன எல்லாரோட கொடுமைல இருந்து காப்பாத்தி என்ன அவன் கூட கூட்டிட்டு போக வந்த என் பிரின்ஸ் மன்வீர் தான என தனக்குள் தோன்றிய கற்பனைகளை வெளிப்படுத்திய சாரா என்ன பெரிய ஸ்டேட்டஸ் புடலங்கா ஸ்டேட்டஸ் யார் என்ன சொன்னா எனக்கு என்ன என் மனசுல நினைக்குரத நான் சொல்ல தான் போறேன் மன்வீர் கிட்ட என்று தன் கையில் மன்வீர் என்ற பெயரை சோப்பு நுரையால் காதலோடு எழுதினாள் சாரா.
அதிரடி தொடரும்...