கொடுத்துடாரு டா நீ சர்ச்ல பாதர் கிட்ட பேசுனத நான் கேட்டுடன்டா மன்வீர் சொன்ன நாள்ள இருந்தே ஊர்ல இருந்தே பாலோ பண்ணிடே வறேன்டா உன்ன பத்தி பாதர் என் கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டாரு நீயும் ரோஸியும் சின்ன வயசுல இருந்தே காதலிச்சிட்டு இருந்திர்கீங்க ஆனா நீ ஊர்ல பொறிக்கிதனம் ரவுடிதனம்லா பண்ணிட்டு சுத்திட்டு இருந்த உனக்கு பொண்ணுதர மாட்டேன்னு ரோஸி அப்பா சொன்னத கேட்டதும் ஆத்திரத்துல கைல கடைச்ச அருவாவ எடுத்து ரோஸியோட அப்பாவோட கைய வெட்டிட அதுக்காக ஜெயிலுக்கும் பொயிட்டு வந்துட்ட ஆனா அதுக்குள்ள ரோஸிக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆயி அவ புருஷன் இறந்தும் பொயிட்டான் ஜெயில இருந்து வெளிய வந்த நீ இதல்லாம் தெரிஞ்சுக்கிட்டு எல்லாரோட கண்லையும் மண்ண தூவிட்டு அவள ஊர விட்டு ஓட வர வெச்சி இப்ப யாருக்கும் தெரியமா திருட்டு தனமா வாழ்றிங்க அது போக பாதர் மூலியமா மாசம் மாசம் அவளுக்கு பணத்த ட்ரான்ஸ்பெர் பண்ற எப்படியோ இங்க வந்து சேந்து டாக்டர்க்கு அடியாள வேல செய்ற நான் சொன்னதெல்லாம் சரி தான என கவின் கேட்க பரவால நான் நனைச்சத விடவே ரெண்டு பேரும் ரொம்ப பாஸ்ட்டா இருக்கிங்கீங்க இப்ப கூட ஒன்னுமில உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல நம்ம எதுக்கு தேவை இல்லாம இப்படி சண்ட போடணும் நான் சொல்றத கேளுங்க நீங்க என் கூட ஒத்து போய்ட்டிங்கனா டாக்டர் கிட்ட சொல்லி உங்களுக்கு எவ்வளவு வேணும்னாலும் சரி சமம்மா வாங்கி தரேன் என்ன சொல்றீங்க என ஜெய் அவர்களை பேச்சில் மயக்க மன்வீரும் ஜெய்யும் ஒருவரை ஒருவர் பார்த்தனர் உடனே ஜெய்யை பிடித்து இழுத்து சுவற்றில் அவன் முகத்தை சாய்த்தான் கவின் டேய் பொறுக்கி என்ன நினைச்சிட்டு இருக்க எங்கள பத்தி..... நாங்க என்ன உன்ன மாறி பணத்துக்காக எது வேணாலும் செய்ற பொறம்போக்கு பசங்கன்னு நினைச்சியா என் ஜெனி சாகுறதுக்கு காரணமான உன்ன கொல்லாமா இன்னும் பேசிட்டு இருக்கேன் பாரு என் தப்புடா மன்வீர் ....இந்தா இவன நீயே வெச்சிக்கோ நான் போய் முதல ரோஸிய முடிச்சிட்டு இவன வந்து முடிக்குறேன் என ஜெய்யை மன்வீரீடம் போர்சாக தள்ளி விட்டு கவின் கிளம்ப வேணாம் கவின் வேணாம் நான் எல்லா உண்மையும் சொல்லிடுறேன் என ஜெய் சத்தமாக கத்த கிளம்பி சென்ற கவின் நின்று விட்டான்.
ஒரு நாள் டாக்டர் பிரசாந்த் அவர பாக்க என்ன வர சொன்னாரு நான் போனதும் என்கிட்ட ஒன்னு சொன்னாரு நீ வேல செய்யணும் அது யாருக்கும் தெரிய கூடாது இது ஒரு முக்கியமா வேலன்னு சொன்னாரு அது என்னனு நான் கேட்டதுக்கு ஆக்ட்ரஸ் சாரவ கடத்தனும்ன்னு சொன்னாரு அத கேட்டதும் நானே ஷாக் ஆயிட்டேன் டாக்டர் சார் இது தேவேஸ்வர் சார்க்கு தெரிஞ்ஜா என்ன ஆகும்ன்னு நான் கேட்டேன் அது உனக்கு தேவ