செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு..
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி
மனம் நிறைந்து தான் போனது ராஜசேகருக்கும் ரீனாவுக்கும். என்னதான் ராஜசேகருக்காக சம்மதித்தாலும் ரீனாவின் மனதில் சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது. தன் மகனுக்கு, தான் அல்லவா பெண்ணை தேடி தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று. ஆனால் இப்போது மஞ்சரியை பார்த்ததும் அந்த வருத்தம் ஓடியே போய்விட்டது. தானே பார்த்திருந்தாலும் இவ்வளவு அழகான ஒரு பெண்ணை, இவ்வளவு பெரிய குடும்பத்தை தேடி பிடித்திருக்கமுடியாது என தோன்றியது. தன் மாமியார் மீது அவர் வைத்திருந்த மரியாதை இப்போது இன்னும் அதிகமானது. தான் பார்த்த பிசினஸ் வட்டத்தில் உள்ள ஆட்களை விட பேரும் புகழும் பெற்ற ஒருவரின் வீட்டில் சம்மந்தம் செய்கிறோம் என்று அந்த ஊருக்குள் நுழைந்தபோதே ராஜசேகருக்கு புரிந்து விட்டது.
கவுண்டர் வீட்டு வரவேற்பில் திக்குமுக்காடி போயினர் இருவரும். இவர்கள் எல்லோரையும் விட அதிக சந்தோசப்பட்டது ஆர்த்தி தான். மஞ்சரியை பார்த்தது முதல் அவள் அண்ணனை போலவே அவளுக்கும் அவளின் முடியை பார்த்து ஆச்சர்யம் தாங்கவில்லை.
"அண்ணி அண்ணி " என வால்பிடித்ததை போல மஞ்சரியோடே ஒட்டி கொண்டாள்.
"உங்க ஸ்கின் ரொம்ப சாப்ட். ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க முடி எப்படி இவ்ளோ ஷைனியா லெங்த்தியா திக்க்கா இருக்கு " என மஞ்சரியை ஒருவழியாக்கி விட்டாள்.
மஞ்சரிக்கும் கிட்டத்தட்ட தன் வயதொத்த ஆர்த்தியை பிடித்துவிட்டது. நகரத்தில் வளர்ந்த பெண் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் அவள் பழகியது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
வீட்டிலேயே புடவை நகை விற்பவர்கள் என எல்லோரையும் வரவைத்திருந்தார் கந்தசாமி. மஞ்சரியை தன் அருகேயே இருத்தி கொண்டார் ரீனா. மங்களத்திற்கு கொஞ்ச நஞ்சம்
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
Niraya pages..super