(Reading time: 11 - 21 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“அது மட்டும் இல்லை ராணி. காணாமல் போன பணிப்பெண் கிரண் பணியாளர் அல்ல. நம் உதய்பூர் தற்போதைய அரசன் மான்சிங் அவர்களின் புதல்வி”

இதைக் கேட்ட ஜோதா ராணி,

‘நிரம்பவும் தவறு செய்து விட்டீர்கள் இளவரசே. இந்த விஷயம் மட்டும் பேரரசருக்குத் தெரிந்தால், கிரண் தேவியின் நிலைமை மிகவும் கவலைக்கு இடமாகும். “ என்றாள்.

தங்களால் இயலாதா ராணி ?

“இயலாது இளவரசரே. நீங்கள் இருவரும் ஒற்றர்கள் என்று அறிந்தால் அடுத்தக் கணம் இவர்களின் சட்டப்படி உங்கள் உயிர் உடலில் தங்காது” என்றுக் கவலையுடன் கூறினாள்.

“இப்போது என்ன செய்வது ராணி? என்னைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் ராணிக் கிரண் தேவியை மீட்கவில்லையெனில் ராணாவின் கடுங்கோபத்துக்கு ஆளாகவேண்டுமே”

“என்ன ராணாவின் கோபமா? ரானாவிற்கு இவள் யார்?”

“ராணாவின் வளர்ப்பு மகள் ராணி. ராணாவின் வாழ்விடங்கள் அத்தனைக்கும் அவர்கள் சென்று இருக்கிறாள்.”

“இறைவா இது என்ன சோதனை? எனில் கிரண் தேவி எனக்குச் சகோதரி முறை அல்லவா?”

இளவரசன் தலையாட்டவும், எதவும் சொல்லாமல் ராணி அமர்ந்து விட்டாள்.

“ராணா எதற்காக இப்படி ஒரு வேலைக்குப் பெண்களை அனுப்பலாம்?”

“ராணாவின் மற்றுமொரு சகோதரர் மகளான தங்களின் திருமணம் அக்பரோடு என்பதில் மகாரானாவிற்கு சற்றும் விருப்பமில்லாமல், அதைத் தடுத்து நிறுத்த எங்களை அனுப்பினார். இன்னும் சில நாட்களில், யாரும் அறியாத வகையில் இங்கிருந்து வெளியேறவும் திட்டமிட்டு இருக்கிறோம் அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது” என்றுக் கூற, ஜோதா ராணி இன்னுமே அதிர்ந்து விட்டார்கள்.

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் நேரம், அக்பரின் வருகை ஜோதா ராணியின் மாளிகையில் தெரிவிக்கப் பட்டு இருக்க எல்லோருமே சற்று அதிர்ந்து போயினர்.

பின் இளவரசன், “ராணி , எப்படியாவது அரசரிடம் கேட்டு ராணிக் கிரண் தேவியின் இருப்பிடம் அறிந்து சொல்லுங்கள் . நாங்கள் எங்கள் ராணியைக் காப்பாற்றி அழைத்துச் சென்று விடுகிறேன்” என்றுக் கூறினான்.

ப்ரித்விராஜ் திட்டப் படி எல்லாமே சரியாகத் தான் இருந்தது. ஆனால் அவர்கள் அக்பரிடம் கிரண் தேவியை  அழைத்துச் செல்ல வேண்டும்  என்று இருக்க, கிரண் தேவியோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.