வேனுக்குள் ஆபீசர் அணிலின் உதவியால் கடைசி சீட்டில் அமர்ந்து இருந்தான் மன்வீர் அந்த வேன் பின்னே ஒரு போலீஸ் ஜீப்பும் செல்ல தயாராக இருந்தது. வேன் புறப்பட்டு கோர்ட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது தங்க வேலுவுக்கு இதயம் பட பட வென அடித்து கொண்டிருந்தது உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது இடையே பார்த்த அருகில் இருந்த ஏட்டு வாட்டர் கேனை எடுத்து வேலுவிடம் நீட்ட அதை குடித்து விட்டு ப்பா வென பெரு மூச்சு விட்டான். 15 நிமிடம் கடந்தது மன்வீர் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த பிரிட்ஜ்ஜை நோக்கி வேன் நெருங்கியது அப்பொழுது சடன்னாக வேன் நின்றது என்னவென்று பார்த்தால் ஒரு நாடோடி கும்பல் பிரிடஜ்ஜை விதி மீறி கிராஸ் செய்து கொண்டிருந்தனர் அந்நேரம் ஜீப் முன்னாடி சென்று விட்டது ஜீப் டிரைவர் சடன் பிரேக் போட்டு நிறுத்தி டேய்.. உங்களுக்குலாம் அறிவு இல்ல இப்படி கண்ணு முன்னு தெரியாமா ரோட்ட கிராஸ் பண்ணறீங்களே லாரி பஸ்சுல அடிபட்டு எவன் எவனோ மண்டைய போட்ட நியூசெல்லாம் பாத்தாலும் நீங்கெல்லாம் திருந்த மாட்டீங்களா டா நீங்கேல்லாம் எப்ப தான் உறுப்புட போறீங்களோ என சப் இன்ஸ்பெக்டர் ஒருவன் ஜீப்பிலிருந்து எட்டி பார்த்து கத்த ஐயா மன்னிச்சிகோங்கய்யா நாங்க ஊருக்கு புதுசுங்கய்யா சென்னை பட்டனத்துக்கு வந்து எதாவுது பொலப்புக்கு வழி தேடலாம்ன்னு வந்தோம்ங்கய்யா அதான் கண்ணு முன்னு தெரியமா போய்க்கிட்டு இருக்கோம் என நாடோடி கூட்டத்தில் ஒருவன் சொல்ல சரி சரி சீக்கிரம் போய் தொலைங்க கோர்ட்டுக்கு லேட்டா போனா இந்த எஸ். பி நம்மல உரிச்சி ஊர்க்கா போட்டுருவான் என சப் இன்ஸ்பெக்டர் புலம்பினான்.
இந்த இடை பட்ட நேரத்தில் வேனுக்கு பக்கத்தில் வேத் காருடன் நிற்க அதன் அருகில் கவின் வேனுடன் வந்து நின்றான் சீக்கிரம் சீக்கிரம் வேன ஸ்டார்ட் பண்ணனும் என ட்ரைவர் சிக்னல் கொடுக்க மன்வீர் தங்க வேலுவை பிடித்து கொண்டு வேனின் கதவை ஓபன் செய்து வேலுவை இறக்க அந்த சமயத்தில் வேத் மன்வீர் சொன்னது போல் காரை ஒட்டி கொண்டு வந்து இரு வேனுக்கு நடுவே நிறுத்தி வேலுவை பத்திரமாக பிடித்து இறக்கி மற்றொரு வேனுக்கு வேக வேகமாக மாற்றினான் ஒரு வழியாக ஜீப் கிளம்ப அதன் பின்னால் மன்வீர் இருந்த வேணும் கிளம்பியது கவின் வேறு திசைக்கு வேனை மாற்றி ஓட்டி சென்றான் வேதும் வேலு செல்லும் வேனை பின் தொடர்ந்து சென்றான் .
அதி வேகத்துடன் டூர் டூரென்ன சத்தம் எழுப்பி கொண்டு ஸ்போர்ட்ஸ் பைக்கில் இரண்டு பேர் ஹெல்மெட் மாட்டி கொண்டு மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தனர். அதில் ப்ளூ கலர் பைக்கை ஓட்டும் ஒருவன் வளைத்து வளைத்து ஒட்டி மன்வீரின் வேனை சேஸ் செய்ய முயன்றான்.இன்னொரு ரெட் கலர் பைக்க்கு காரன் வேதை பின் தொடர்ந்து அவனை கன்னில்