(Reading time: 21 - 42 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

டாக்டரின் மேல் விழுந்தது  நோ........என  கத்திய பிரசாந்தின் சகாப்தம் அதோடு முடிந்தது லேப் முழுவதும் கருப்பு புகையால் சூழ பட்டும் அனைத்து பொருட்களும் கருகியும் நொறுங்கி விழுந்தும் கரு கருவென கருப்பு  தீவு போல காட்சியளித்தது.

வின் வீட்டில்....

என்ன நடக்குது கவின் என்னாச்சு... ஏன் இப்படி நடத்துச்சு??நம்ம பிளான் பண்ண மாரி எல்லாம் கரெக்ட்டா தான போச்சு அப்ப எப்டி இப்படி??நம்ம வேலு சார  ஒரு வேன்ல இருந்து இன்னொரு வேனுக்கு மாத்றோம்ன்னு எப்படி தெரிஞ்சுது?? யார் நம்ம பிளான்ன லீக் அவட் பண்ணது  நீ இல்ல நான் இல்ல அப்ப ஜெய்யா எங்க அவன் எங்க ஜெய் என மன்வீர் கேள்வி மேல் கேள்வி கேட்க கொஞ்சம் பொறுமையா இரு மன்வீர் ஜெய் எங்கயும் போல டாக்டர் கிட்ட இருந்து ஏவிட்டேன்ஸ் எடுத்துட்டு வர தான் போயிருக்கான் நாம தான் அவன அனுப்புசோம் மறந்துடுட்டியா ...பொறுமையா  இருன்னு என்ன எப்பயும் சொல்லுவ இப்ப என்ன ஆச்சு உனக்கு மன்வீர் என கவின் சொல்ல பொறுமையா ....எப்படி கவின் அங்க வேதோட அப்பா எரிஞ்சி கருகிட்டாரு  இனி எப்படி பொறுமையா இருக்குறது  வேதுக்கு என்ன பதில் சொல்றது யார நம்புறது நம்ப கூடாது  யாரு உண்மையா இருக்கா பொய்யா இருக்கா நம்ம பண்ணது தப்பா கரெக்டா இனி என்ன பண்றது எப்படி உண்மைய வெளி கொண்டு வரது என கோவமாக மன்வீர் கத்தி கொண்டே அருகில் இருந்த டைனிங் டேபிள் மேலிருந்த டேபிள் மேட்டை தூக்கி விசிறி அடிக்க அதன் மேலிருந்த பீங்கான் கண்ணாடி  பொருட்கள் எல்லாம் தூள் தூளானது இதை பார்த்த கவின் ஆத்திர பட்டு போதும் நிறுத்து மன்வீர் இதுல எங்க தப்பு நடந்துச்சு எப்படி நடத்துச்சுன்னு யாருக்கும் தெரியாது அதுமட்டுமில்ல நீ தான நீதி நியாயம் சட்டம்னு பேசிட்டு இருப்ப பாரு உன்னோட நேர்மைக்கு வந்த சோதனைய நீ நினைக்குற மாரியோ இல்ல நான் நினைக்குற மாறியோ எல்லாம் அப்படியே நடத்துடாது மன்வீர் இந்த உலகம் ரொம்ப பெறுசு இப்ப இருக்க அட்வான்ஸ்டு டிஜிட்டல் டெக்னாலஜி  மூலமா நம்ம ஒவ்வொரு அசைவும் எதிரியால தெரிஞ்சிக்க முடியும் செவதுக்கு கூட காது கேக்கும் பாத்து பேசனும்னு பெரியவங்க சொன்ன பழமொழி இப்ப உண்மையார அளவுக்கு சிப்பு பக்குன்னு சீக்ரேட்டா பதுக்கி வெச்சி எதிரிங்க கண்காணிக்குற பரந்த உலகத்துல தான் நாமா இருக்கோம் மன்வீர் எல்லாருக்கும் வாழ்க்கைல பிரசன்ன இருக்கு  அத  பிரச்சனைக்கான தீர்வ நோக்கி தான் எல்லாரும் பயணிச்சுட்டு இருக்காங்க கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க யாரும் இந்த லாப்பிங் புத்தா மாரி சிரிச்சுட்டு இல்ல .....

என டீவி ரேக் மேல் ஒய்யாரமாக சிரித்து நின்று  கொண்டிருந்த பலிங்கிலான பல பல வென மின்னிய குபேர பொம்மையை கை காட்டி கவின் மன்வீரிடம் கூற அதை உற்று பார்த்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.