(Reading time: 17 - 34 minutes)
Kaarigai
Kaarigai

அதற்குள் அதை பொய்யாக்கி விட்டான்.

அவன் கொடுத்த பைலை எல்லாம் சரி பார்க்க அவன் சொன்ன அரை மணி நேரம் போதாது, அது அவனுக்கும் தெரியும். அவளின் மேல் இருந்த கோவத்தை காட்ட அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. 

அன்று மாலை வரை அவன் அவளை ஒரு இருபது முறை அவன் அறைக்கு அழைத்து ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து கொண்டு திட்டினான். அவளும் ஒன்றும் பேசாமல் அவன் சொன்னதை செய்தாள். நான்கு நாட்களாக சரியாக ஆறுமணிக்கு கிளம்பியவளுக்கு மீண்டும் இன்று நேரம் கடந்தும் வேலை முடிவதாக தெரியவில்லை.

அவளின் வேலையை முடித்து விட்டு அவனின் அறைக்குள் நுழைந்தவளை கண்டவன் அவளின் லேப்டாப்பில் பார்வையை ஓட்டினான்.

அவள் கைகளை பிசைந்து கொண்டு மொபைலையே பார்த்து கொண்டிருந்தாள். அந்த மொபைல் இரண்டொரு முறை அடித்து ஓய்ந்தது.. அதை கவனித்தவன் பார்வையை லேப்டாப்பில் பதித்தபடி , "எனி ப்ரோப்லேம் பவித்ரா? புது மொபைல் போல. கால் வந்துட்டே இருக்கே " எனவும், "இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் ? எனக்கு லேட்டாகுது சார்" என்றவளின் முகத்தை பார்த்தான். அவள் கவனம் எல்லாம் மொபைலில் இருந்தது. சத்யாவின் முகம் இறுகியது. காலையில் வந்தவன் அவளுக்காக காத்து கொண்டிருப்பானாயிருக்கும். அவன் தான் அவளை பார்க்க முடியாமல் கிடந்து தவிக்கிறான் போல.அவளின் வேலை எல்லாம் முடிந்து அவளை அனுப்ப எண்ணியவனின் மனம் மாறியது.

" இன்னும் ஒர்க் முடியலையே பவித்ரா" என்றான் மீண்டும் லேப்டாப்பில் பார்வையை பதித்தபடி. அவனிடம் திரும்பியவளுக்கு கோவம் வந்தது. ஆனாலும் கோவத்தை கட்டு படுத்தி கொண்டு அமைதியாகவே பதில் சொன்னாள்

"சார் திஸ் இஸ் டூ மச். நான் மட்டும் தான் இந்த ஆபீஸ்ல இவ்ளோ நேரம் இருக்கேன். "

"உங்க வேலையை நீங்க தான் பண்ணனும்" அவனும் அதே அமைதியான குரலில் சொன்னான்.

"எனக்கு ஒர்க் பண்றது பிரச்சனை இல்லை. நான் வேணா நாளைக்கு நேரத்துல வந்து பண்றேன். ஆனா இப்போ முடியாது. நான் கெளம்பனும் " -பவித்ரா

பவித்ராவின் பதிலில் நிமிர்ந்து அமர்ந்தவன் தீர்க்கமாக அவள் முகத்தை பார்த்தான். அவளும் அதற்கெல்லாம் அசராமல் அவன் கண்களை பார்த்தாள்.

"இன்னைக்கு என்ன? யாராவது காத்திருப்பாங்களா?" அவன் குரலில் இருந்த கிண்டலை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.