(Reading time: 17 - 34 minutes)
Kaarigai
Kaarigai

தொடர்கதை - காரிகை - 04 - அமுதினி

வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு

பண்ணு சுத்தி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு

எண்ணி எண்ணி பார்த்திடிலோர் என்னமில்லை நின் சுவைக்கே கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா

வனின் அறையின் ஜன்னல் வழியே கீழே பார்த்து கொண்டிருந்த சத்யாவுக்கு கோவத்தில் கண்கள் சிவந்து போனது. அன்று அலுவலகத்தின் மற்றொரு கிளைக்கு சென்று வந்ததில் இருந்து ஏனோ அவனால் அவளிடம் கடுமையாக பேச முடியவில்லை. அவளும் முடிந்தவரை எல்லா வேலைகளையும் சீக்கிரமே முடித்து விட்டு கிளம்பி சென்று விடுகிறாள். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அவன் பார்க்கும் காட்சி அவனின் கோவத்தில் எண்ணெய் ஊற்றியது;

யார் இவன்? இத்தனை நாள் இவனை நான் பார்க்கவில்லையே? இப்போது என்ன புதிதாக இவனுடன் இவள் வண்டியில் போவதும் வருவதும்? என்னை கண்டால் மட்டும் கல் போல நிற்பவள் அவனிடம் எப்படி பேசி கொண்டிருக்கிறாள்...அவனுக்கு எரிச்சல் மிகுந்தது. அவளுடன் வந்தவன் அவளுக்கு வண்டியில் இருந்து ஏதோ ஒரு சிறிய பெட்டியை எடுத்து கொடுத்தான். அது ஒரு மொபைல் போன் என்பது இங்கிருந்து பார்க்கும் போது புரிந்தது அவனுக்கு. எப்படி நடித்தாள் மொபைல் எண் கேட்டபோது. எவனோ ஒருவன் வாங்கி கொடுப்பதற்க்காகத்தான் காத்திருந்தாள் போல! அதை வாங்கி கொண்டவள் அவனிடம் விடை பெற்று கொண்டு அலுவலகத்தை நோக்கி நடந்து வருவதை பார்த்தவன் கோபத்துடன் தன்னுடைய இருக்கையில் அமர்ந்தான்.

தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தவளுக்கு இப்போது தான் கொஞ்சம் சமாதானமாக இருந்தது. ஒரு வழியாக உமாவை அங்கிருந்த பள்ளியில் சேர்த்தாகி விட்டது. விடுதியும் இருவர் தங்குவதற்கான அறைக்கு மாறிவிட்டார்கள். ஓரளவு செலவு எல்லாம் சமாளித்ததால் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள் பவித்ரா. அந்த மொபைல் போனை எடுத்து அதில் அந்த புதிய சிம் கார்டை இட்டவள் யாருக்கோ அந்த மொபைலில் இருந்து பேசினாள். தன் அறையில் இருந்து இதை பார்த்து கொண்டிருந்த சத்யாவிற்கு அவளை ஓங்கி ஒரு அறை விடலாம் போல இருந்தது.

அந்த மொபைலை பேசி முடித்து கீழே வைத்தவள் லேப்டாப்பை ஆன் செய்தாள். அதற்குள் சத்யா அழைக்கவும் அவன் அறைக்குள் சென்றாள்.

அவன் அறையில் இருந்து வந்தவளுக்கு சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது என்று நினைத்து முடிக்க கூட இல்லை,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.