"உங்க பேரு?" -சத்யா
"என் பேரு முருகன் சார்" -முருகன்
"முருகன், நீங்க பவிக்கு...சாரி...பவித்ராக்கு...தப்பா நெனைக்காதிங்க...நீங்க ரெண்டு பேரும்?" தயக்கமாக இருந்தது சத்யாவிற்கு.
அவன் முடிக்காமல் விட்டாமலும் அவன் கேட்க வந்தது புரிந்தது போல பதறினான் முருகன்.
"சார்... என்ன சார்... அந்த பொண்ணு சின்ன பொண்ணு சார். என் வயசு என்ன அது வயசு என்ன... அது நல்ல பொண்ணு சார்..." முருகன் பதறவும், தர்மசங்கடமாகி போனது சத்யாவிற்கு. அவள் சொன்னது சரிதானே, ஏன் இவ்வளவு கேவலமாக யோசித்தேன்., ஒரு பெண்ணுக்கு ஒருவர் உதவினால் உடனே அதை தவறாக எண்ண வேண்டுமா? தன்னையே கடிந்து கொண்டான் சத்யா.
"சாரி முருகன். தப்பு என் மேல தான். நான் தான் தப்பா நெனைச்சுட்டேன்"-சத்யா மனதார வருத்ததுடன் மன்னிப்பு கேட்டான்.
"பரவால்லை சார். அந்த பொண்ணுகிட்ட கேட்காம என் கிட்ட கேட்டிங்களே. அதுவே போதும். அதுகிட்ட கேட்ராதிங்க சார். மனசு ஒடிஞ்சு போய்டும். எனக்கு அந்த பொண்ணை ஒரு அஞ்சு வருஷமா தான் சார் தெரியும். அதுக்கும் முன்னாடி அந்த பொண்ணை பத்தின விவரம் எதுவும் எனக்கு தெரியாது சார். சகுந்தலாதேவி அம்மா வீட்ல தான் இருந்துச்சு அஞ்சு வருஷமா. நான் அந்த வீட்ல டிரைவர்ரா இருந்தேன். அந்த அம்மா ஒரு மூணு மாசம் முன்னாடி தவறிட்டாங்க. ரொம்ப நல்லவங்க சார். நெறய சமூக சேவை பண்ணுவாங்க. அந்த அம்மா செத்ததும் அவங்க பசங்க எல்லாம் அவங்க வீடு காருன்னு என்ன எல்லாம் இருந்துச்சோ அதெல்லாம் எடுத்துட்டு போயிட்டாங்க. ஆனா யாருக்கும் அந்த அம்மா பார்த்துட்டு இருந்த ஆஸ்ரமத்தை பார்த்துக்க மனசு வரல. இந்த பொண்ணு தான் அந்த ஆஸ்ரமம் பக்கத்துலயே ஒரு ஹாஸ்டல் எடுத்து தங்கி அந்த ஆஸ்ரமத்துக்கு வேணும்ங்கறது எல்லாம் பண்ணுது. ஏதோ சில நல்லவங்க அந்த அம்மா பேருக்காக கொடுக்கற நன்கொடைல தான் சார் அந்த ஆஸ்ரமம் ஓடுது. இந்த பொண்ணும் அதனால முடிஞ்சுது எல்லாம் பண்ணுது சார். இப்போ அதோட தங்கை ஊருல இருந்து வந்துருக்கு. அதுக்கு ஸ்கூல் பீஸ் அது இதுனு செலவுக்கு பணம் வேணும்னு இருந்த ஒரு ஸ்கூட்டியையும் வித்துடுச்சு. அதனால தான் சார் ரெண்டு மூணு நாளா நான் கொண்டு வந்து விடறேன். அதுவும் நான் ரொம்ப வற்புறுத்துனதால தான் வர ஒத்துக்கிச்சு. அதுக்காக