(Reading time: 17 - 34 minutes)
Kaarigai
Kaarigai

மீண்டும் தயங்கினாள்.

"பவி, நீ ஹாஸ்டல்ல இருக்கறதா நெனைச்சுக்கோ. ஒரு பேயிங் கெஸ்ட் மாதிரி வந்து தங்கிக்கோ. இந்த ரெண்டு வாரம் கழிச்சு நீ போகும்போது நீ என்ன கொடுக்கணும்னு நெனைக்கிறியோ அதை கொடு. நான் வாங்கிக்கிறேன். போதுமா? இப்போ வரியா" லட்சுமி இவ்வளவு தூரம் இறங்கி வரவும், அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் ஏன் தனக்காக இவ்வளவு செய்கிறார் என்று.

"அம்மா ஆனா என் கூட என் தங்கை இருக்கா..." உமாவை காரணம் காட்டி விலக நினைத்தாள் பவித்ரா.

"அதெல்லாம் தெரியும் பவி. நம்ம போகும் போது அவளையும் உன் ஹாஸ்டல்ல இருந்து பிக்கப் பண்ணிக்கலாம். அங்க இருந்து நம்ம வீடு பக்கம் தான். அதெல்லாம் ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை. நீ ரெஸ்ட் எடு. நான் போயி சத்யாகிட்ட பேசிட்டு வண்டியை ரெடியா வெக்க சொல்றேன். நான் வந்ததும் கிளம்பலாம்." என்றவர் அதற்க்கு பின் அவள் எதுவும் கேட்கும் முன் அந்த அறையை விட்டு வெளியேறினார்.

பவித்ராவுக்கு குழப்பம், பயம், கவலை என்று எல்லாம் சேர்ந்து தலையை வலித்தது. இது என்ன புது குழப்பம்...யாரையும் என்னோடு நெருங்க விடாமல் தள்ளி தள்ளி இருந்தும் கடவுள் ஏன் என்னை இவர்களோடு பிணைக்கிறார்? இவரிடம் கோப படவோ மரியாதை குறைவாக பேசவோ என்னால் முடியவில்லையே...குழம்பியவள் அந்த தலையணையில் சாய்ந்து கண்களை மூடினாள்.

வெளியே பதற்றத்துடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த சத்யாவிடம் வந்தார் லட்சுமி.

"அம்மா" அவரை கண்டவன் அவரிடம் ஓடினான்.

"அம்மா என்னம்மா சொன்னா? வரேன்னு சொன்னாளா? என்னம்மா எதுவும் சொல்லாம இருக்கீங்க?" அவன் டென்ஷனுடன் அவரை பிடித்து குலுக்கி கொண்டிருந்தான்.

"என்னை பிடிச்சு இந்த ஆட்டு ஆட்டுனா நான் எப்படி பதில் சொல்றது. பர்ஸ்ட் எனக்கு பதில் சொல்ல ஒரு இடைவெளி கொடு. நீ பாட்டுக்கு கேள்வி கேட்டா..." பொறுமையாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார் லட்சுமி.

அவரின் அருகே சென்று அமர்ந்தவன் அமைதியாக அவரின் முகத்தை பார்த்தான் ஏதாவது சொல்வாரா என.

"டென்சன் ஆகாதடா. அவ வரேன்னு சொல்லல." லட்சுமி முடிப்பதற்குள், "என்னம்மா ஏதாவது சொல்லி வர வெக்க வேண்டியது தான" இவன் பதற, "டேய்ய் சொல்றதை முழுசா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.