(Reading time: 18 - 35 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

இப்போ ஜெனிடிக்ஸ்ல ஒரு பிஸினஸ் நடக்குது. நம்முடைய மரபணுவின் டிஎன்ஏ வரிசையை வைத்து நம்முடைய உறவினர்கள் யார்னு கண்டுபிடிச்சிடலாம்.    நிறைய மரபணு மாதிரியை சேர்த்து வைத்திருக்கிறார்கள். நம்முடைய ஜீன் அமைப்பை அத்துடன் ஒத்து பார்த்து நம்முடைய சொந்தக்காரங்க அவங்க லிஸ்டில் இருக்காங்களான்னு சொல்றாங்க.”

அப்புறம்…”

நாம ஓடிப்போய் அவங்களை கட்டிபிடிச்சு பரம்பரை பாசமலர் பாடல்களை பாட வேண்டியதுதான். என்ன ஒண்ணு இந்த தேடலுக்கு ரொம்ப பணம் செலவாகுதாம்

அதுக்கெதுக்கு அவங்கட்ட  போகணும், நம்ம சொந்தக்காரங்க யார்னு நமக்கு தெரியாதா?”

வெளி நாடுகள்ல அப்படித்தானே. கல்யாணம் டைவர்ஸ்அப்புறம் வேறு யாரையாவது கல்யாணம் செய்துகறதுகுழந்தைகள் பிரிஞ்சிடும்க.. பிற்காலத்தில் தேடி கண்டுபிடிக்க இதெல்லாம் உதவும்.”

அது சரி அப்போ ஏன் சிரிச்சீங்க?”

உன்னோட ஜீனை இந்த சொந்தக்காரங்க தேடலுக்கு அனுப்பி வச்சாஏதாவது குரங்கோட ஒத்து போகும்மடமடன்னு மரம் ஏறுகிறாய்னு பார்த்தாகாலையில ஒரு கிளையில காலை வச்சு இன்னொரு மரத்திற்கு ஜம்ப் பண்ற.. “

அது அந்த  நவாபழத்தை பறிக்க போனேன்பக்கத்துலேயே மாங்காயும் இருந்துச்சு.”

ஏதோ ஒன்னுமங்கி மாதிரி செய்தாய்தானே

குரங்கு இன்னொன்னும் செய்யும் பாய்ஞ்சு கடிச்சு வைக்கும்

அதேதான்எனக்கு அதுதான் பயம். குரங்கு கடிச்சா ரேபீஸ் வந்திடும்

அது நாய் கடிச்சாதானே

மோஸ்ட்லி இந்தியால அப்படித்தான் நடக்குதுஆனால் ரேபீஸ் வைரஸால் தாக்கப்பட்ட எந்த அனிமல் கடிச்சாலும் ரேபீஸ் வரும்

நாய்க்கடிச்சவங்களை நான் பார்த்துருக்கேன். அவங்க நாய் மாதிரியே குலைப்பாங்க

அது  ரேபீஸ் வைரஸ் மூளையில் உள்ள மரபணுவை பாதித்து ஜீன் மாற்றம் செய்வதால்  வருவதுதான். முழுசாக நாய் மாதிரியே செய்வாங்கன்னு சொல்ல முடியாது ஆனால் தசை பாதிப்பு வருவதாலும் நரம்பு மண்டலம் பாதிக்கப் படுவதாலும் அப்படி ஆகும். ஆனால் இன்னமும் ஏன் ரேபிஸ் பாதிப்புக்குள்ளாவர்கள் நாய் மாதிரி  நடந்து கொள்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.