(Reading time: 18 - 35 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

நான் ஒரு விசயத்தை புரிஞ்சுகிட்டேன்.”

என்னதும்மா?”

நீங்க எப்படிப்பட்டவர்னு எனக்கு பல சந்தர்ப்பங்கள்ல தெரிஞ்சுடுச்சுநாம் காட்டுல இருக்கோம். தனியா இருக்கோம்முழு சுதந்திரம் வேற இருக்கு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒவ்வொருத்தர் எப்படி  நடந்துப்பாங்க?”

இவள் என்ன சொல்ல வருகிறாள்?’

நான் இங்கே தனியா இருக்கற பொண்ணுகூட இருக்கறவங்களுக்கு இந்த சூழலை பயன்படுத்திக்கணும்னு எண்ணம் வரும்.“

பயன்படுத்திக்கணும்னா?”

ரொமாண்டிக்காவா…?

தப்பா  நடந்துக்கறது வேற விசயம். யதேச்சையா நடக்கிறபோது ரியாக்ட் பண்லாம்சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து விழுந்து விழுந்து உதவி பண்ணலாம்…  நீங்க என்ன செஞ்சீங்க?”

என்ன செஞ்சேன்?”

ஏதாவது குற்ற பத்திரிக்கை தயாராகி விட்டதா?

ம்…   நேத்து நாம் ஓடையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தபோது கால் தடுக்கி நான் உங்கமேல விழுந்திட்டேன். உங்களை வேற இறுக்கி பிடிச்சேன். அந்த இடத்துல என்ன  நடந்திருக்கணும்நீங்க அப்படி எதுவும் செய்யாமல் என்னை பிடித்து நிலை  நிறுத்தி விட்டு கீழே விழுந்திருந்த தண்ணீர் பாத்திரத்தை எடுத்து செக் பண்ணிட்டு இருந்தீங்க

யெஸ்ஐ ரிமெம்பர்அதுல எதுவும் டேமேஜ் ஆகிட்டதான்னு பார்த்தேன்ஓஹ்அதிதி  நம்மகிட்ட இருக்கறதே ரெண்டே பாத்திரம்தானே.அதனால..” அவன் விளக்கியபோது உள்ளுக்குள் வேறு ஒன்றும் உரைத்தது. பாத்திரமாடா முக்கியம்?

நீங்க செஞ்சது சரிதான்…. அப்புறம்கூட இரவில் பரணில் தூங்கியபோது,, அந்த சின்ன இடத்தில் என் மீது கைபடுமோ கால்படுமோன்னு பயந்து  நீங்க ஒதுங்கினீங்க.”

அது குட் மேனர்ஸ் அதிதிஇருக்கின்ற சின்ன இடத்தில் நான் வசதியாக ஹாயாக படுத்தால் உனக்கு இடம் இருக்காதுன்னு நினைச்சேன்

கரெக்ட்…  நான்கூட தூக்கத்துல உங்கமீது கையை போட்டு விட்டேன். நான் அதை உணரும் முன் நீங்க என் கையை மெதுவா எடுத்துவிட்டு இன்னும் ஒதுங்கி போயிட்டீங்க. அப்போது நீங்களும் நல்ல தூக்கத்தில் இருந்தீங்க

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.