(Reading time: 18 - 35 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

பதிவு மட்டும் இருக்கிறது ஒரு சிவப்பு கவரில் போட்டு ‘ஃபெயில்ட்என்று கட்டம் கட்டி கோப்புகள் காப்பறைக்கு சென்று விட்டிருந்தது.. என்னவாயிருக்கும்?

அந்த காலகட்டத்தில் ஆராய்ச்சி மையத்தில் ஏதேனும் மாற்றங்கள் நடைபெற்றிருந்தனவா என்று துப்பு தேடினான். அப்போது தலைவராக இருந்த சர்மா திடீரென இறந்து போயிருந்தார். தட்ஸ் இட்அவர் இறந்ததால் இந்த ஆராய்ச்சி தடைபெற்று விட்டிருக்குமோ?

ஆஹாங்… அப்படியெனில் வேறு எந்த ஆராய்ச்சியும் இதுபோல ஸ்டாப் ஆகவில்லையேமற்றவை தொடர்ந்து நடந்திருக்கின்றனவே?

இது மட்டும் ஏன் அம்போன்னு நிற்கிறது? அவன் தேடல் திரும்பவும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றது.

எதற்கும் இருக்கட்டும் என்று அந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட முறை… எந்த வகையான வைரஸை பயன்படுத்தினார்கள்ஆராய்ச்சியின் பதிவுகள் ஆகியவற்றை குறித்து கொண்டான். அதிரதனிடம் இதுபற்றி டிஸ்கஸ் செய்ய வேண்டும்.

அதே சமயத்தில் அதிரதன் காட்டின் நடுவே ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தான். அவன் ஆவலுடன் எதிர்பார்த்த குரங்குகள் தொல்லை இல்லாமல் ஆனந்தமாக குளித்தான். குளித்து முடித்து ஈர உடையுடன் கரையேறினான்.

கரையில் அமர்ந்திருந்த அதிதியிடம் உடைகளை வாங்கியவன் அவள் செய்ததுபோலவே அங்கிருந்த பாறையின் மறுபக்கம் சென்று உடைமாற்றி வந்தான்.

அடுத்து என்ன ப்ளான்?”

முதல்ல இந்த ஈரமான துணிகளை காய வைக்க வேண்டும். நம்மிடம் ஒரு செட் மட்டுமே உள்ளது. மழை வந்து விட்டால் மாற்று உடை கிடையாது

அவள் சொன்னபடியே உடைகளை காய வைத்து விட்டு அமர்ந்தான். தொலைவில் ஒரு குரங்கு மரத்திலிருந்து தலைகீழாக தொங்கியபடி ஆற்றில் அடித்து செல்லும் எதையோ குச்சி கொண்டு இழுத்துக் கொண்டிருந்தது.

அந்த குரங்கு மனுசங்களைபோலவே குச்சியை கொண்டு எதையோ இழுக்கிறதுஎன்றாள்.

ஆங், மனுசங்களைப்போல இல்லைநாமதான் அதுகிட்டே இருந்து காப்பியடித்திருக்கிறோம். உண்மையில் குரங்குகள்தானே நம்முடைய முன்னோர்கள்

அப்படின்னு சையின்ஸ்ல படிச்சிருக்கேன்

சொல்லப்போனால் மனிதகுரங்குகள்தான் நம் முன்னோர்கள்அதுவும் 50 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்த முன்னோர்கள்.” சொன்னவன் சிரித்தான்.

எதுக்கு சிரிக்கிறீங்க?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.