(Reading time: 18 - 35 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

வந்திருந்தார்.  அப்படியெனில் அந்த ஆராய்ச்சியும் முக்கியமானதாகவே இருக்கும். அது என்ன?

புற்று நோய் மரபணுவை மாற்றம் செய்யும் ஆராய்ச்சி! வாவ்!

ஜீன் ஆராய்ச்சிகள் ஆரம்பித்த 90களிலிருந்தே புற்று நோய் பற்றிய ஆராய்ச்சிதான் ஹீரோவாகியது. ஏனெனில் அது ஒரு ஆட்கொல்லி நோய் மட்டுமல்லமற்ற நோய்களைபோல வைரஸ் அல்லது பாக்டீரியாவால் உருவாவதில்லை. அது மரபணு சார்ந்தது. புற்று நோயை உருவாக்கும் மரபணுவை கண்டுபிடித்தபின் அந்த ஆராய்ச்சிகள் விரிவுபடுத்தப்பட்டன. இப்போது ஜீன் எடிட்டிங் முறையை பயன்படுத்தி புற்று  நோயை உருவாக்கும் மரபணுவிலிருந்து  நோய்க்கு அடிப்படையான  டிஎன்ஏ தொடரை  நீக்கி விடுகின்றனர்ஆனால் அப்போது இந்த முறை இல்லை!

கரெக்ட்…! இப்போது வினய் கையில் இருக்கும் ஆராய்ச்சி 2000ல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அப்போது ஜீன் மாற்றம் மட்டுமே இருந்தது. ஜீனிலிருக்கும் தேவையில்லாத டிஎன்ஏவை நீக்க முடியாது  ஆனால் வேறு ஒன்றை இணைக்கலாம். இந்த ஆராய்ச்சியில் என்ன செய்தார்கள்?

புற்று நோய் உருவாக்கும் மரபணுவை செயல்பட விடாமல் தடுக்கும் ஸப்ரசர் மரபணுவை இணைத்திருக்கிறார்கள். அதை எப்படி செய்தார்கள்?

ஒரு வைரஸ்ஸை வெக்டாராக பயன்படுத்தி செய்திருக்கிறார்கள். வைரஸால்தான் ஜீனை பாதிப்புக்குள்ளாக்க (இன்ஃபெக்ட்) முடியும். இதனால் டிஎன்ஏ வரிசையை மாற்றி அமைத்து குறிப்பிட்ட ஜீனை செயல்பட வைக்கவோ செயல்படாமல் வைக்கவோ செய்ய முடியும்அப்புறம் என்ன ஆச்சு?

பரிசோதனைசாலையில்  நடந்த அனைத்தும் அதில் வரிசையாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது… ஒரு வெள்ளை எலிக்கு புற்று  நோயை வரவழைத்து இந்த முறையை பயன்படுத்தி குணப்படுத்தி இருக்கிறார்கள். அதுவரை ஆராய்ச்சி வெற்றி என்று ரெக்கார்ட் ஆகி உள்ளதுஅதன்பின் என்னவானது…?

மனிதனின் மூதாதையர் எனப்படும் குரங்கிடம் அல்லது புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் அதை முயற்சித்து பார்த்தார்களா? இதுபோன்ற ஆராய்ச்சிகள் குரங்கிடமோ மனிதரிடமோ செய்ய அரசின் ஒப்புதல் வேண்டும். நம்முடைய நாட்டின் நெறிமுறைகளின்படி அப்போது இதற்கு ஒப்புதல் கிடைத்திருக்காதோ? அதனால் இந்த ஆராய்ச்சி உடனடியாக  நிறுத்தப்பட்டிருக்குமோ?

அவ்வாறெனில் அதற்கான எந்த நோட்ஸும் இல்லாமல் செயல்முறை குறிப்பும் இல்லாமல் குளோசரும் இல்லாமல் அந்த ஃபைல் ஏன் இருக்கிறது?. கடைசியாக 2004ம் வருடம் செய்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.