(Reading time: 17 - 33 minutes)
Kaarigai
Kaarigai

முதல் போட்டோ. எங்க மேரேஜ் ரெஜிஸ்திரார் ஆபீஸ்ல தான் நடந்துச்சு. பிரெண்ட்ஸ் ஒரு நாலு பேரு தான் இருந்தாங்க. " அந்த படத்தை வருடியபடி சொன்னார் லட்சுமி. அந்த புகைப்படத்தில் லக்ஷ்மியின் முகத்தில் தெரிந்த பயத்தை கண்ட பவித்ரா, "கொஞ்சம் சிரிச்சிருக்கலாம் அம்மா நீங்க. இன்னும் அழகா இருந்துருக்கும்" சொல்ல, "என்ன பண்றது, பதினெட்டு வயசுல கல்யாணம்னு சொன்னப்போ கொஞ்சம் பயம் அதான்" என்றவர் அடுத்த படத்திற்கு சென்றார். எல்லாம் சுந்தரமும் லக்ஷ்மியும் இருந்த படங்கள். உறவினர்கள் என்று யாரும் இல்லை. எல்லாம் நண்பர்கள் உடன் எடுத்தது தான்.

அடுத்த புகைப்படத்தில் நிறுத்தினார் லட்சுமி.

"இருக்கற எல்லா ஆல்பத்துலையும் எனக்கு பிடிச்ச ஒன் ஆப் தி போட்டோ இது" என்றார் லட்சுமி.

நிறைந்த வயிறுடன், கன்னங்களில் சந்தனம் பூசி கை நிறைய வளையல்கள் இட்டு வாய் நிறைய புன்னகையுடன் இருந்தார் லட்சுமி. எங்க கல்யாணம் முடிஞ்சு மூணு வருஷத்துக்கு அப்பறம் எடுத்தது பவித்ரா. அப்போ நான் ஏழு மாசம். சத்யா அப்பா தான் வளைகாப்புக்கு தனியா எல்லாம் பண்ணுனார். அப்போ நாங்க தேனீ பக்கத்துல ஒரு கிராமத்துல இருந்தோம். அந்த பீல் மறக்கவே முடியாதது பவி. என் வயித்துல என்னை அம்மானு கூப்பிட, எங்களுக்குனு முதல் சொந்தம் உருவாக போகுதுனு தெரிந்த அந்த நிமிஷம் நானும் அவரும் அடைந்த இன்பத்துக்கு அளவே இல்ல. அதை சொல்லி புரிய வைக்க தெரியல. ஆனா அந்த நிமிஷம் என் வயிற்றை தடவி தடவி என் குழந்தை எனக்குள்ள இருக்கான்னு நான் ஒவ்வொரு நொடியும் அடைஞ்ச பரவசம் இருக்கே" தான் வயிற்றில் கை வைத்து இன்னும் அதை உணர்வது போல லட்சுமி பேச, பவித்ராவிடம் இருந்து எழுந்த அழுகை அடக்க முடியாமல் வெடிக்க ஒரு நிமிடம் புரியாமல் திகைத்து போனார் லட்சுமி.

"பவி, பவி இங்க பாரு. என்னாச்சு...என்னாச்சுடா? அழாத...என்னம்மா ஆச்சு" அவள் அடக்கமாட்டாமல் அழ, லக்ஷ்மிக்கு பயம் தொற்றி கொண்டது. அவளை தன்னோடு சேர்த்து அணைத்து அவளின் முதுகை மெல்ல வருட, அவளின் அழுகை மெல்ல குறைந்து விசும்பலாக மாறியிருந்தது. மெல்ல அவளை நேரே இருந்த்தியவர் "பவிம்மா" என அழைக்க அவரின் அழைப்பில் நிமிர்ந்து அவரின் முகம் பார்த்தாள் பவித்ரா. கண்கள் கலங்கி சிவந்து கிடந்தது.

"இந்த உலகத்துல அம்மா, அப்பா, சொந்தம், நட்பு, கூட பிறந்தவர்கள், கணவன், மனைவி, மக்கள்னு யாரவது ஒருத்தர் இல்லாம யாருமே இருக்கறது இல்லை. இந்த மாதிரி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.