(Reading time: 17 - 33 minutes)
Kaarigai
Kaarigai

"இல்லை மா. நான் அதெல்லாம் பாக்க மாட்டேன்" சொன்னவளை ஆச்சர்யமாக பார்த்தார் லட்சுமி.

"டிவி இல்ல, சினிமா இல்லை, ஸ்மார்ட் போன் இல்லை. சூப்பர் பவி. நீ என் ஜெனெரேஷன்ல பொறக்க வேண்டியவ. கொஞ்சம் லேட்டா பொறந்துட்ட" லட்சுமி சொல்லவும் மெலிதாக புன்னகைத்தாள் பவித்ரா.

"ஹ்ம்ம். நீ பயங்க கஞ்சம் பவி" லட்சுமி சொல்ல, புரியாமல் அவரை பார்த்து விழித்தாள் பவித்ரா.

"பின்ன என்ன சிரிக்க கூட இவ்ளோ யோசிக்கிற...அதுக்கு என்ன காசா பணமா" லட்சுமி சொல்லவும் அவரின் தோரணையை கண்டு சிரிப்பு வந்தது பவித்ராவுக்கு.

"குட் இப்படி தான் சிரிக்கணும். எனக்கு போர் அடிக்குதே என்ன பண்ணலாம்" அவளை தனியாக விடாமல் ஏதாவது ஒன்று பேசிக்கொண்டே இருந்தால் தான் அவளும் சகஜ நிலைக்கு வருவாள் என்று எண்ணிய லட்சுமி "சரி வா என் ரூம்ல நெறைய போட்டோ ஆல்பம்ஸ் இருக்கு. போயி பாக்கலாம்." என்றவர் அவளையும் அழைத்து கொண்டு தன்னுடைய அறைக்கு வந்தார்.

அங்கிருந்த ஒரு அலமாரியில் இருந்து இரண்டு மூன்று பெரிய ஆல்பங்களை எடுத்தார்.

அவளருகே சென்று அமர்ந்தவர், "இதெல்லாம் எனக்கு பொக்கிஷம் மாதிரி பவி. எப்போ எல்லாம் எனக்கு மனசு ஒரு மாதிரி இருக்குமோ அப்போ எல்லாம் இதை எடுத்து பார்ப்பேன். அவரு கூடவே இருக்கற மாதிரி இருக்கும்" என்றவர் ஒரு ஆல்பத்தை எடுத்து மடியில் வைத்தார்.

அதன் முதல் பக்கத்திலேயே லக்ஷ்மியும் சுந்தரமும் மாலையும் கழுத்துமாக இருந்தனர்.  அந்த புகைப்படத்தை பார்த்த பவித்ரா, "அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க இதுல" அந்த புகைப்படத்தை பார்த்தபடியே சொல்ல, "அப்போ நான் இப்போ அழகா இல்லையா?" செல்லமாக கோபித்து கொண்டார் லட்சுமி.

"அய்யயோ அப்படி சொல்லலம்மா. நீங்க இப்பவும் அழகு தான். ஆனா இதுல ரொம்ப சின்ன பொண்ணா அழகா அமைதியா இருக்கீங்க. இப்போ தான் உங்களுக்கு கொஞ்சம் குறும்பு ஜாஸ்தியாயிடுச்சு போல" சிரிக்காமல் சொன்னவளை கண்டவர் 'அடிப்பாவி நீ பாக்க தான் அப்பாவி மாதிரி இருக்க, வாயாடி" என அவளின் கன்னம் பிடித்து கிள்ளினார் லட்சுமி.

"உனக்கு ஒன்னு தெரியுமா பவி, இது தான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்து கிட்ட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.