(Reading time: 22 - 44 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

சென்றார். அதை தடுக்க கூட தெம்பில்லாமல் பயத்தில் நாங்களும் அமைதியாக வாய்மூடி அதை பார்த்துக் கொண்டிருந்தோம். அதுதான் நான் அவளை கடைசியாக பார்த்தது மறுநாள் அவளுடைய உடல் கிணற்றில் இருந்ததாக கொண்டு வந்து சேர்த்தார்கள். அந்த வயதிலேயே அது மிகப்பெரிய தவறாக எனக்குப்பட்டது"

"அவளை அழைத்து செல்லும் பொழுது நாங்கள் போராடி இருக்க வேண்டுமோ என்று எனக்கு தோன்றியது. அவ்வாறு செய்யாத குற்றஉணர்வு எனக்குள்ளேயே தங்கிவிட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சி நடந்து சிறிது நாட்களிலேயே அந்த இல்லம் மூடப்பட்டது. அங்கிருந்த எங்களை வேறு ஒரு இடத்திற்கு மாற்றினார்கள். அது உண்மையிலேயே மிக நல்ல இடம். அவர்கள் தந்த ஆதரவால்தான் நான் படித்து முன்னேறினேன். கல்லூரி படிப்பை முடித்தபின் ஆராய்ச்சியாளர் தேர்வுக்குரிய பரீட்சைகளை எழுதி அதிலும் தேர்வு பெற்று மரபணுவியலை என்னுடைய பாடமாக எடுத்து அதிலும் தேர்ச்சி பெற்றேன். நான் முதல் முறையாக உங்களிடம்தான் உதவியாளராக சேர்ந்தேன். என் அம்மாவை என்னிடமிருந்து பிரித்து சென்ற புற்று நோய்க்கு சரியான மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது. அதைத்தான் நீங்களும் செய்து கொண்டிருந்தீர்கள்" மடமடவேன்று சொன்னவன்மூச்செடுத்தான்.

"இப்பொழுது அபிதாவின் கதையை கேட்ட பொழுது எனக்கு  தேஜு நினைவு வந்தது. அன்றைக்கு தேஜுவிற்கு என்னால் உதவ முடியாமல் போனது. இப்பொழுது அபிதாவுக்கு உதவினால் எனக்கு மன அமைதி கிடைக்கும் என்று நம்புகிறேன். டிரஸ்ட் மீ பாஸ்.. நான் உங்களுக்கு சரியான உதவியாளராக இருப்பேன். அபிதாவை  முழுவதுமாக குணப்படுத்த உங்களுக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன் என்று உறுதியாக சொல்கிறேன்."

வினய் பேசும் பொழுது அவனுடைய கண்களில் தெரிந்த வலி அதிரதனை யோசிக்க வைத்தது. அவனுக்குள்  ஒரு வேதனை உள்ளது. அவனுடைய சிறுவயது தோழிக்கு என்னவாகியிருக்கும் என்று புரிந்தது.. உண்மையை சொல்லப்போனால் வினயின் பேக்ரவுண்ட் என்ன என்று கூட அவனுக்கு இதுவரை தெரியாதுஒரு உதவியாளராகதான் இதுவரை அவனை பார்த்து வந்திருக்கிறான். இப்போதுதான் கொஞ்சம் நெருக்கமாக பேச

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.