(Reading time: 22 - 44 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அதிதி அபியை நினைத்து கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை மனதை உலுக்கியது அதிரதனால் அவளை  புரிந்துகொள்ள முடிந்தது.

உயிருடன் இல்லை என்று நினைத்த ஒரு உறவு இப்பொழுது உயிருடன் இருக்கிறது என்பதை நினைத்து அவள் மனம் ஒரு பக்கம் ஆறுதல் அடையும்.

ஆனாலும் அவளுடைய சகோதரிக்கு ஏற்பட்டிருக்கும் நிலையினை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது கண்ணீர் விட்டு அழுது வருவதனால் கொஞ்சம் கொஞ்சமாக மனது இயல்பு நிலைக்குத் திரும்பும். அதுவரை சற்று பொறுத்திருக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.

அதைப் புரிந்து கொண்டது போல் மற்றவர்களும் அமைதியாக அதிதியை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.  கடிகாரத்தின் பெரிய முள் ஒரு முறை சுற்றி வந்தபின்…. கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய அழுகை நின்றது அவளை மெதுவாக அதிரதன் தொட்டான்.

"அதிதி இது அழுவதற்கான நேரம் இல்லை. உன் சகோதரியின் வாழ்க்கையில் விதி மிக மோசமாக விளையாடி உள்ளது. நீ இப்பொழுது பொறுமையாக இருந்து இந்த நிலையை சமாளிக்க வேண்டும். அப்போதுதான் அபிதாவின் நிலையை சீர் செய்ய முடியும். அந்த பெண்ணை ஒரு சாதாரண வாழ்க்கைக்கு நாம் கொண்டு வருவதற்கு மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு அவரை மனதளவில் தயார் செய்ய வேண்டும்."

அவனுடைய குரலுக்கு செவிமடுத்து அதிதியை அவனுடைய கைகளை பற்றிக்கொண்டாள்.

 "சொல்லுங்கள் ரதன். நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் ".என்று மெல்லிய குரலில் அழுகையை கட்டுப் படுத்தி அவனை கேட்டாள்.

 அவளுடைய அந்த அணுகுமுறை அவனுக்கு மிகவும் பிடித்தது. எவ்வளவு துயரம் இருந்தாலும்…  அடுத்து என்ன செய்வது? என்று யோசிக்கும் அந்த இயல்பு எப்பொழுதுமே வெற்றியை பெற்று தரும் என்று அவனுக்கு தெரியும்.

அதிதி பேசியதை கேட்கவும் அங்கிருந்த மற்றவர்களும் நிமிர்ந்து அமர்ந்த நிலையில் அதனை கவனமாக பேச ஆரம்பித்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.