(Reading time: 22 - 44 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

முடியவில்லை"

"ஆனால் அதுதான் உண்மை. அந்த குழந்தை சரியான வளர்ச்சியும் இல்லாமல் பல வளர்சிதை மாற்றங்களுக்கு உட்பட்டது"

அதிரதன் கவனமாக குறிப்புகளை கொடுத்துக்கொண்டே இருந்தான். அதிதியிடம் கவனம் குவிய ஆரம்பித்தது.

"நீங்கள் சொல்வதை வைத்து என்னால் புரிந்துகொள்ள முடிகிறதுஆனால் அதை உங்களால் சரிசெய்ய முடியாதா?. இப்பொழுது ஜீன் ஆராய்ச்சியினால் பல மாற்றங்களை கொண்டுவர முடியும் என்று சொன்னீர்கள் அல்லவா."

"ஆமாம் அதிதி. இதுபோன்ற மரபணுவில் நடைபெற்ற மாற்றங்களை ரிவர்ஸ் செய்யும் முறைகள் பல உண்டு. அதற்கு பெயர் ரிவர்ஸ் ஜெனிடிக்ஸ் என்று சொல்வோம். அதை அந்த குழந்தையிடம் பிரயோகித்து பார்க்கலாம். ஆனால் அதற்கு முன் அந்த குழந்தை முழு மனதுடன் அதற்கு சம்மதிக்க வேண்டும். அந்த முயற்சியில் வெற்றி பெற அந்த குழந்தைக்கு மனவலிமை அதிகம் தேவைப்படும். அது இருந்தால்தான் புதிய சிகிச்சையை அதன் உடல் ஏற்றுக்கொள்ளும். இல்லையெனில் அந்த ட்ரீட்மெண்ட் தோல்வி பெற்றுவிடும்"

"வாழனும் என்று ஆசை இருந்தால் மன வலிமையும் தானாக வந்து விடுமே. ஆனால் அந்த குழந்தைக்கு எப்படி மனதை வலிமை படுத்த முடியும்?. நீங்கள் சொல்லும் கணக்கை வைத்து பார்க்கும் பொழுது அது இப்பொழுது ஒரு வளர்ந்த பெண்ணிற்குரிய வயதில் இருக்க வேண்டும். அதற்கு உடல் மட்டுமே வளர்ச்சி குன்றியதால் இல்லை மன வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதா?".

'எனக்கு கிடைத்த விபரங்களின்படி அந்த குழந்தை ஒரு வளர்ந்த பெண்ணிற்குரிய சிந்தனைகள், தெளிவான  எண்ணங்கள் கொண்டு இருப்பதாகத்தான் தோன்றுகிறது"

"அப்படி என்றால் சரியான சிகிச்சை முறையை மேற்கொண்டால் அந்த பெண் நல்லபடியாக சாதாரணமான வாழ்க்கையை வாழ முடியும் என்று  புரிய வைக்க முயற்சிக்கலாம்"

"யாரை வைத்து அப்படி சொல்ல வைக்கும் முடியும்?.  நான் சொன்னால் என்னை நம்ப முடியாது அல்லவா?. அதற்கு என்று யாராவது இருக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.