(Reading time: 22 - 44 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அத்தனையும் மீறி அதை எப்படி சரி செய்வது என்று நீங்கள் முயற்சி எடுத்து இருக்கிறீர்கள்" மேலும் தொடர்ந்து,

"இன்னும் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். இத்தனை வருடங்களாக ஒரு விஷயத்தை மனதில் பாரமாக நீங்கள் சுமந்து கொண்டு இருந்து இருக்கிறீர்கள். நான் இப்பொழுது சொல்கிறேன் இந்த விஷயத்தில் என்னுடைய முழு ஒத்துழைப்பையும் நான் தருவேன். அபிக்காவை  விரைவில் குணமடைய செய்து உங்கள் மனதை நிம்மதி அடைய செய்வேன். " என்று உறுதி கூறினாள்.

"தட்ஸ் இட் அதிதி. இதைத்தான் நான் உன்னிடம் எதிர்பார்த்தேன். இதுவரை நடந்ததை நினைத்து வருந்துவதை விட…  நடந்து போனதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று முயற்சி எடுப்பதே நல்லதுநீ அதை சிந்திக்க ஆரம்பித்து விட்டாய்இனி எல்லாமே நல்லபடியாக நடக்கும்என்று அதிரதன் புன்னகைத்தான்.

"நான் இனி என்ன செய்ய வேண்டும் "என்று அதிதி கேட்டாள்.

" அதைப்பற்றி திட்டமிடத்தான் நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம். நாம் நாளை க்ருபா அங்கிளை சந்திக்க செல்லலாம். அங்கு அபியை சந்தித்து சமாதானம் செய்ய வேண்டியது உன்னுடைய வேலை. இப்பொழுதுவரை அபி வெளி உலக தொடர்பை விரும்பவில்லை. முக்கியமாக உனக்கு அவருடைய நிலை தெரிய வேண்டாம் என்று நினைக்கிறார். ஒருவேளை உன்னை பார்த்தால் கோபப்படலாம். இல்லை அந்த வீட்டை விட்டு விலகிச் செல்லலாம். நாம் அந்த நிலைக்கு செல்ல விடக்கூடாது."

"இப்பொழுது என்னால் அபி அக்காவின் நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது. இயல்பாகவே அக்காவிற்கு கொஞ்சம் கோபம் அதிகம். அவர்களால் நேர்மையற்ற செயல்களை பொறுத்துக் கொள்ளவே முடியாது. அதேபோல் என்னிடம் பாசமும் அதிகம். அதனால்தான் என்னை சந்திப்பதை தவிர்க்க விரும்புகிறார்."

"அவர் உன் மேல் வைத்திருக்கும் பாசம்தான் நமக்கு இப்பொழுது இருக்கின்ற ஒரே ஆயுதம். நீ அதை பயன்படுத்திதான் அவர்களை வழிக்கு கொண்டு வர வேண்டும்."

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.