(Reading time: 15 - 29 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

பேச அவள் தயாராக வேண்டும் அல்லவா?.  அதற்காக அபியிடம் அதிரதனை பற்றி விவரங்களை தெரிவித்தாள். அவனால் மட்டுமே அவளுக்கு உதவ முடியும் என்பதையும் மெல்ல விவரித்தாள்.

 அதே சமயத்தில் வினயுடன் அதிரதன் பேசிக் கொண்டிருந்தான்.

"பாஸ்ஆம்புலன்ஸ் எப்போது வரும்?"  என்று கேட்டான்.

' அது நாளை காலையில் வந்து விடும். நாம் அபியை செக்கப் செய்து எல்லா மெடிக்கல் ரிப்போர்ட் தயார் செய்து விடலாம்" என்றான்.

" உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்"

"என்ன வினய்?'

"நீங்கள் அதிதி மேடமிடம் கடுமையாக நடந்து கொள்கிறீர்களோ என்று தோன்றுகிறது. அவர்கள் உண்மையில் உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறார்கள் " என்றான்.

" அது உனக்கு எப்படி தெரியும்?"

" இன்று காலையில் என்னிடம் சில விஷயங்களை கேட்டுக்கொண்டிருந்தார். உங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது…? என்று கேட்டார்"

"ஒருவருக்கு என்ன பிடிக்கும் என்று விசாரித்தால் அவர்கள் மீது அன்பு வைத்து இருப்பார்கள் என்று அர்த்தமா?. "

"அப்படி இல்லை பாஸ்!.  அவர்கள் உங்களிடம் நெருங்குவதற்கு விருப்பப்படுகிறார்கள். உங்கள் மனைவிதானே நீங்கள் இவ்வளவு இடைவெளி விட கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது. அவ்வளவுதான்"

"சரிப்பா…  உன்னை என் சகோதரனாக நினைக்கிறேன். நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவள் என்னிடம் ஒரு ஆர்வம் காட்டுகிறாள் என்பது எனக்கு புரிந்ததுதான்   அது சாதாரண உறவுதானே. கணவன் மனைவி என்ற உறவுதானே... அதற்கு மேல் அங்கு எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. நான் அவளிடம் எதிர்பார்ப்பது வேறு" என்று இழுத்தான். தொடர்ந்து

" அவளுக்கும் என்னை பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதை விட அதிகமாக நான் அவளிடம் எதிர்பார்க்கிறேன்"

"சார்இது ஆராய்ச்சி அல்ல.. டெஸ்ட் டியூபில் போட்டு இது உண்மையான அன்பா இது போலியானதாஉறுதியானதா..  இது காதலா இல்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.