(Reading time: 15 - 29 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

விளக்க வேண்டும். அதை என்னைவிட நீங்கள் நன்றாக விளக்குவீர்கள் என்று நினைக்கிறேன்." என்றாள்.

அதிதியை அழைத்துக் கொண்டு அவன் அபியின் அறைக்குள் அனுமதி பெற்று உள்ளே சென்றான். உள்ளே பரவியிருந்த அந்த இருட்டிலும் அபி  கட்டிலில் அமர்ந்திருப்பது தெரிந்தது.

இருட்டினால் மங்கலான பார்வையை அவன் சீராக்கி கொண்டே அவளுடைய முகத்தைப் பார்த்தான்.

" வணக்கம் நான் அதிரதன்" என்று சொல்லவும்,

 சட்டென்று அவளுடைய பார்வை அவனை நோக்கித் திரும்பியதுஅப்போதுதான் அவன் கவனித்தான் அந்தக் கண்கள் இன்னும் தீட்சண்யமாக இருக்கின்றனமேலும்  அவன் பேசுவது அவளுக்கு நன்றாகவே கேட்கிறது என்று புரிந்துகொண்டான்.

"நான் அடிப்படையில் ஒரு மருத்துவன். ஆனால் மரபணு தொடர்பான ஆராய்ச்சியில் இருக்கிறேன். உங்களுக்கு என்ன நேர்ந்தது என்பது எனக்கு நன்றாக தெரியும். அது மாற்றக் கூடிய மாற்றங்கள்தான் என்று நான் நம்புகிறேன். உடனடியாக இல்லை என்றாலும் கண்டிப்பாக பலன் தரக்கூடிய மருத்துவ சிகிச்சை முறைகளை நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அந்த சிகிச்சைகளை நான் தொடங்க முடியாது. அதற்கு உங்களுடைய அனுமதி வேண்டும்என்று சொன்னான்.

 அவளிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை

"இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால் உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன் ?" என்று கேட்டான்

 கையில் இருந்த பேப்பரை எடுத்து அவளிடம் நீட்டினான்.

" உங்களுக்கு பார்வை பிரச்சனை இல்லை என்றே நினைக்கிறேன். இந்த படங்களை பாருங்கள்என்றான். அவள் தலை அசைவது தெரிந்தது.

" அதுதான் உங்களுடைய உடலிலும் நடந்திருக்கின்ற மாற்றங்கள்

அதிதியும்  உடனே ஆர்வமாக அந்த தாளை அபியுடன் சேர்ந்து எட்டி பார்த்து

" இதுதான் நான் சொன்ன அந்த மரபணு. இந்த இடத்தில்தான் ம்யூட்டேஷன் என்பது நடக்கிறது. அதனால்தான் உங்களுக்கு இந்த சிக்கல் வந்திருக்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.