(Reading time: 15 - 29 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

கவிதைக்கு கீழேயே ' நீயே படித்துப் புரிந்து கொள்' என்று எழுதி முடித்து விட்டாள்.

அவள் அந்த கவிதையை  எடுத்துக் கொண்டு கூடத்தில் வந்து சோபாவில் அமர்ந்து மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தாள். அவளுக்கு புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும்... இருந்தது. இதற்கான விளக்கத்தை வேறு யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் மட்டுமே தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்று அவளுக்கு தோன்றியது.

அப்போது வினய் அங்கு வர.. அவனை அவள் கேள்வியாக பார்ப்பதை உணர்ந்து அவன் அருகில் வந்தவன்,

" மேடம் உங்கள் கையில் என்ன பேப்பர்ஏதாவது கேட்கணுமா?" என்றான்.அதற்கு அவள்,

" அது என்னவென்று நான் சொல்கிறேன். முதலில் என்னை மேடம் என்று சொல்லாதீர்கள். அதிதி என்றே அழையுங்கள். என்னைவிட நீங்கள் வயதில் பெரியவர். அதனால் என்னை பேர் சொல்லியே அழையுங்கள்" என்றவள்,

"இந்த பாடலில் உள்ள கவிதையை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா என்று சொல்லுங்கள்" என்று அவனிடம் நீட்டினார் வினய் அந்த தாளை வாங்கி கவிதையை படிக்க ஆரம்பித்தான்.

மூச்சுக் காற்றை சுமந்தே...

வெற்று வெளியில் மிதந்து

ஏதோவொரு தடையாலோ

மற்றொன்றுடன் மோதியோ

உடைந்து சிதறி மறையும்

காற்றுக் குமிழ் நானல்ல..!

மற்றொன்றுடன் மோதினாலும்

உடைந்து சிதறிப் போகாமல்...

மோதியதை பலவாறாக்கும்

உள் புகுந்து அணு பிளக்கும்

கூரிய வினைதிட்பம் உள்ள

ஒரு பௌதீகத்தின் வழியாக

மோதல்களினால் பயனுற்று

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.