Page 10 of 10
அதீத ஆற்றல் கொள்கிறேன்...
தொடர்ந்து வரும் பிளவுகளும்
கடி விசையுறும் துகள்களும்
சக்தியின் பிரவாகமாக மாற
என் உலகத்தை உயிர்ப்பிக்கிறேன்
எப்போதாவது....
ஒரு அணு உலையைப் போல்
வெடித்து சிதறிவிடாமலிருக்க
வெதுவெதுப்பான வெப்பத்தில்
பஞ்சுப்பொதியின் பரிவுடன்
உள்ளுக்குளேயும் குளிர்விக்கும்
தாய்க்கோழியின் மென்சிறகு
அணைப்பை வேண்டுகிறேன்.
கவிதையை படித்த வினயின் முகத்தில் பல உணர்வுகள் வெளிப்பட்டன.
"உங்களுக்கு புரிந்து விட்டதா" என்று அதிதி வினவினாள்.
தொடரும்
Next episode will be published on 28th Apr. This series is updated weekly on Tuesday Evenings.