(Reading time: 14 - 28 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை  மறந்தறியேன்! - 01 - சாகம்பரி குமார்

"த்யா இன்னுமா நீ கிளம்பவில்லை" என்று கேட்டுக்கொண்டே நிரஞ்சன் அறையின் உள்ளே வந்தான்.

" இதோ நான் தயாராகிவிட்டேன்" என்று சத்யவிரத்  சொன்னான். அவனை ஏற இறங்க பார்த்த ரஞ்சன்,

" இல்லை இது என்னுடைய சத்யா கிடையாது. அவன் இளவரசன் போல உடை உடுத்துவான். அவன் கண்களில் ஒரு கம்பீரம் தெரியும். எனக்கு அந்த சத்யாதான் வேண்டும்" என்றான்.

" இது என்ன சின்ன குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிக்கிறாய்" என்று சத்தியவிரதன் சிரித்தான்.

"நீ இப்படியே கிளம்பி கீழே வந்தாய் என்றால் உன் தங்கைக்கு நான்தான் பதில் சொல்லவேண்டும்இரு நானே உனக்கு வேறு ஒரு அழகிய உடையை தேர்ந்தெடுத்து தருகிறேன்" என்று சொல்லி விட்டு வார்ட்-ரோப் அருகில் சென்றான்.

அங்கு இருந்த உடைகளை அலசி ஆராய்ந்து ஒரு உடையை தேர்ந்தெடுத்தான். அது கொஞ்சம் அழகான வெளிர்  நீல வண்ணத்தில் அமைந்த சட்டையும் அடர்ந்த நிறத்திலான பேண்ட் என்று  மிகவும் அழகாக இருந்தது.

"இந்த உடை அழகாக இருக்கும். நீ பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள தகுதியான உடை இதுதான்" என்று அவனிடம் தந்தான்.

"ஓகே…  ஓகே…  நான் இந்த உடையை மாற்றி வருகிறேன்" என்று சொன்னவன் திடீரென்று நினைவு வந்தவனாக,

" ஆமாம் மனு என்ன செய்து கொண்டிருக்கிறாள்?" என்று கேட்டான்.

"அவளுடைய அத்தையிடம் துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருக்கிறாளா. காலை உணவை முடித்தாகிவிட்டது. பிறகென்ன சற்று நேரத்தில் உறங்கப் போய் விடுவாள்"

"ஓஹ்" ஒரு பெருமூச்சை எடுத்து சத்யாபேசினான்...

"அவள் முன்பு போல ரொம்பவும் அடம் பிடிப்பதில்லை அல்லவா?. அவளுடைய அன்னை அவன் தேடுவதில்லை"

"அதற்காக நாம் சந்தோஷம்தான் கொள்ள வேண்டும். ஏன் பெருமூச்சு விடுகிறாய்?. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் சரியாகி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.