(Reading time: 14 - 28 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

கொண்டு வருகிறது. நீ மட்டும் நிமிர்ந்து நில்!"

"நான் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள தயாராகி விட்டேன். இப்பொழுது நாம் நம்முடைய வேலையை ஆரம்பிப்போம்" என்று சத்யா சொன்னான்.

"சத்யா…  நீ நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கிறது. ஏனெனில் உன்னுடைய கடந்தகால பங்களிப்புகள் அப்படிப்பட்டது…  இப்பொழுது தொழில் முனைவோர் சங்கத்தில் அதனால்தான் உன் மீது நம்பிக்கை வைத்து உன்னை தலைவராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்"

"இனிமேல் நான் வாழ்க்கையில் ஜெயித்து என்ன ஆகப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. என் உயிர் மீராவை இழந்து நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்பதே பெரிய விஷயம். நான் மனுவுக்காகதான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றான்.

'நீ முழுவதுமாக மீராவை இழந்துவிடவில்லைஅவள் இல்லை என்று போலிஸ் சொன்னதை  நம்பாதே. அவள் எங்கோ உயிருடன் இருக்கிறாள். உன்னுடைய அன்பு அவளை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும். அப்பொழுது நீயும் மனுவும் அவளுக்காக எவ்வளவு நாட்கள் காத்திருந்தீர்கள் என்பதை அவள் புரிந்து கொள்வாள்இது முற்றுப்புள்ளி அல்ல இது ஒரு சிறிய கமா... நாம்தான் பொறுமையாக காத்திருக்க வேண்டும் காலம் கனிந்து வரும்' என்று முடித்தான்.

"ரஞ்சன்…  ஒரு விதத்தில் நான் பெரிய அதிர்ஷ்டசாலிதான். ஏனெனில் இந்த மாதிரி சோதனையான நேரத்திலும் கூட எனக்கு துணையாக நிற்கக்கூடிய ஒரு உறவை எனக்குத்  தந்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி தான் சொல்லவேண்டும். நீயும் உன்னுடைய ஆதரவும் இல்லை எனில் நான் உயிருடன் இருக்கவே  முடியாது" என்று சத்யவிரத் சொன்னான்.

"பெரிய வார்த்தை எல்லாம் பேச தேவையில்லை சத்யாநான் உன்னுடைய நண்பன். அதுவும் இளம் வயதிலிருந்தே  உன்னுடன் இருக்கிறேன். என்னுடைய எத்தனையோ துன்பங்களை நீ பங்கெடுத்துக் கொண்டு இருக்கிறாய். முக்கியமாக உன்னுடைய தங்கையை என்னை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.