(Reading time: 14 - 28 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

துயரத்தில் ஆழ்ந்து இருந்தோம். இன்றிலிருந்து அதற்கு ஒரு விடிவு வருகிறது" என்று கிசுகிசுத்தார்.

மனுவை  கொஞ்சிவிட்டு நந்தினியிடம் தந்த சத்யாதிரும்பி மகேஸ்வரனை பார்த்து

"அப்பா நான் கிளம்புகிறேன்" என்று சொல்லிவிட்டு இருவர் காலையும் தொட்டு வணங்கி நிமிர்ந்தான்.

' நீ நல்லபடியாக சென்று வா. உன்னுடைய வாழ்க்கை இனிமேல் ஒளி பெறும்" என்று இருவரும் ஆசீர்வதித்து அனுப்பினர்.

வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட முக மலர்ச்சியுடன் தான் சத்யவிரத் இருக்கிறான் என்று ரஞ்சனுக்கு புரிந்தது. ஆனாலும் அதை ஆரம்பித்து வைத்தாலே போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவன் மீராவை இழந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்துவிடுவான் என்று நம்பினான்.

ஆனால் தொழில் முனைவோர் சங்க கட்டிடத்தை நோக்கி கார் விரையும் பொழுது அவனுடைய முகம் மெல்ல களை இழந்து வருவதை கவனித்தான்.  கொஞ்சம் இறுக்கமான பாவனை அவனுடைய முகத்தில் வந்தது.

"சத்யா நீ ரிலாக்ஸாக இரு. நாம் சில கட்டத்தை கடந்தே ஆக வேண்டும். அதிலும் அங்கிருப்பவர்கள் உன்னை நம்பி அவர்களுக்கு உன்னால் ஏதாவது நல்லது செய்ய முடியும் என்று நம்பியவர்கள். அதனால் நீ உன் நிலையை மறந்து விட்டு அவர்களுக்காக சிந்திக்க கற்றுக் கொள்" என்றான்.

"அது எனக்கு புரிகிறது. இருந்தாலும்... சில காலகட்டத்தை என்னால் கடக்க முடியாமல் போய் விடுமோ என்ற பயமும் வருகிறது. "

"இதைப் பற்றி சிந்திக்காது... இப்பொழுது உன்னுடைய மனதில் அடுத்து என்ன செய்வது என்பது மட்டுமே இருக்க வேண்டும். நீ என்னுடன் பேசிக்கொண்டே வா. அமைதியாக இருக்காதே' என்று காரை விரைவாக ஓடினானா.

அந்த கட்டிட வாசலை அடையும் பொழுது அவனுக்காக நிறைய பேர் காத்திருந்தார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.