நம்பி திருமணம் செய்து கொண்டு இருக்கிறாய். உன்னுடைய அந்த நம்பிக்கை வெறும் உறவுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. இதயத்தின் ஆழத்தில் இருந்தது என்பது எனக்கு தெரியும். நானும் உன்னுடைய நட்பை இன்னமும் என்னுடைய ரத்த நாளங்களில் பதிய வைத்துதான் இருக்கிறேன். நான் கடைசி வரைக்கும் உனக்கு துணையாக இருப்பேன். என்றாவது ஒருநாள் மீராவும் நீயும் இணைந்து சந்தோஷமாக மகிழ்ச்சியாக வாழ்வதை பார்ப்பேன்"
"நீ சொல்வது நடக்குமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உன்னுடைய வார்த்தைகள் எனக்கு ஒருவித சக்தியைத் தருகின்றன. இது போதும் எனக்கு" என்று அவனை இறுக கட்டிகொண்டான்.
" சரி… சரி… நாம் பேசிக்கொண்டே இருந்தால் நேரம் கடந்து விடும். நாம் விரைவில் கிளம்ப வேண்டும் அங்கு நமக்காக அனைவரும் காத்திருப்பார்கள்"
இருவரும் கிளம்பி ஹாலுக்கு வந்தனர். அங்கு மனுவை வைத்துக்கொண்டு நந்தினி நின்றிருந்தாள்.
" அண்ணா நீங்கள் கிளம்பி விட்டீர்களா?. மனு குட்டி உங்களுக்காக காத்திருக்கிறாள். அவளுக்கு உறக்கம்கூட வந்துவிட்டது" என்று சிரித்தாள்.
பஞ்சு பொநனதி போல கொளுக் முளுக் என்று இருந்த மனு குட்டி பொக்கை வாயை திறந்து ஆவென்று சிரிக்க… மனம் குளிர்ந்தவன் அவளை தூக்கி கொஞ்சி முத்தமிட்டு விட்டு,
" நந்துமா, இவனை பத்திரமாக பார்த்துக்கொள்"
" கண்டிப்பாக அண்ணா. அதை நீங்கள் சொல்லவே தேவையில்லை. மனு என்னுடைய குழந்தைதான்" என்று அவள் சொன்னாள்.
அவர்கள் பேசிக்கொள்வதை கண்களில் நிம்மதியுடன் விஜயா பார்த்து கொண்டிருந்தார்.
அவருடைய அருகில் நின்ற மகேஸ்வரன் "கண்ணெல்லாம் கலங்கி கொண்டே இருக்காதே. அவன் கிளம்பி விட்டான். இந்த காட்சியை பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிறது?. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நாம்