(Reading time: 14 - 28 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

வெற்றியடையும் என்று நினைத்தான்.

பதவி ஏற்றபின் அவனை வாழ்த்தி  அனைவரும் பேசினர். கடைசியாக அவன் பேச வேண்டிய முறை வந்தது.

தன் சொல்லப்போகும் செய்தியை ஒரு முறை மனதிற்குள் ஒருங்கிணைத்து கொண்டவன்... மனதை ஒருமுகப்படுத்தி போடியம்  மீது ஏறினான். அங்கிருந்த பார்வையாளர்களை நேர் பார்வையாக பார்த்து பேச தொடங்கினான்.

இங்கிருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து என்னை தலைவராக ஏற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். அதற்கான நியாயத்தையும் முழுமையாக நான் செய்வேன் என்று  உறுதிபடச் சொல்கிறேன். எத்தனையோ எதிர்மறை கருத்துக்கள் முன்வைக்கப் பட்ட பொழுதும் அத்தனையும் மறுத்து நீங்கள் என்னை வெற்றி பெற வைத்துள்ளீர்கள்…  இது என்னுடைய வாழ்க்கைக்கான வெற்றியாகவும் நான் எடுத்துக் கொள்வேன். எனக்கு புரிகிறது இன்றைய சூழலில் தொழில் முனைவோருக்கான சாதகமான நிலை இல்லை. ஏனெனில் அரசின் செயல் திட்டத்தில் மக்களுக்கான அஜன்டா மட்டுமே முதன்மை பெற்றுள்ளது. நாட்டின் அடித்தளமாக இருக்கும் தொழில் முனைவோருக்கான திட்டங்கள் மிகவும் குறைவாக உள்ளது. இது பற்றி நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். நம்முடைய பங்களிப்பையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இதனை நான் கண்டிப்பாக செய்வேன். மேலும் நலிவுற்ற தொழில் முனைவோர்களுக்கு ஆன உதவிகளை அரசாங்கத்திடம் பெற்று தருவேன். அது அல்லாமல் நாம் புதிதாக சில திட்டங்களையும் அறிமுகப்படுத்த இருக்கிறோம். அதுபற்றி அடுத்தடுத்து வரும்  சந்திப்புகளில்  விளக்குகிறேன். அதற்கு உங்களுடைய ஆதரவு முழுமையாக எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். இத்துடன் என்னுடைய சிறிய உரையை முடித்துக்கொள்கிறேன். மீண்டும் என்னுடைய நன்றியை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்"

அவன் தன்னுடைய உரையை முடித்துக் கொண்டு கீழே இறங்கும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.