(Reading time: 9 - 17 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

ஒரே வேலை ஆத்தை பெருக்கறது... அதையும் பாதி நேரம் பாட்டியை மஸ்கா அடிச்சு பண்ண வச்சுடற... இதுல பேச்சு வேற.... இங்க பாரு... நீ பத்ரி கூட போறது பெருசில்லை... அங்க போய் அசமஞ்சமாட்டம் கெக்கபிக்கேன்னு எல்லாரன்டையும் பேசிண்டு இருக்காத.... அவன் சொல்ற இடத்துல உக்காந்துண்டு அவா விளையாடறதை பார்த்துட்டு வந்து சேரு சரியா....”

“சரிம்மா இந்தாத்துல இருக்கற அத்தனை பேரும் சாயங்காலத்துலேர்ந்து இதை ஒரு நூறு வாட்டி சொல்லிட்டா... நான் சமத்தா போயிட்டு சமத்தா வந்துடுவேன்... நீ கவலைப்படாத...”

“என் கவலையெல்லாம் உன்னை பத்தி இல்லைடி.... உன்னை கூட்டிண்டு போறானே பத்ரி அவனைப் பத்திதான்... மாதவா மைத்ரேயி எந்த வம்பும் பண்ணாம நீ பார்த்துக்கோ...”, ஷ்யாமளா சொல்ல காமாட்சியும், மாதவனும் மைத்ரேயியைப் பார்த்து சிரித்தார்கள்...

“ரொம்ப சிரிக்காதடா... அப்பறம் பத்ரி அண்ணாக்கிட்ட உன்னை கூட்டிண்டு போக வேண்டாம்ன்னு சொல்லிடுவேன்....”

“ஆமா நீ சொன்னா அண்ணா அப்படியே கேட்டுடுவான் பாரு...”, இவர்கள் வழக்காடிக்கொண்டிருக்கும்போதே பத்ரி கீழிருந்து அழைக்க மைத்ரேயியும், மாதவனும் அன்னையிடமும், பாட்டியிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள்... 

மாதவன் தன் சைக்கிளில் வர, பத்ரியின் பின்னால் ஏறிக்கொண்டாள் மைத்ரேயி...

“பத்ரிண்ணா இன்னைக்கு எங்க விளையாடப் போறேள்....”

“மாதவப்பெருமாள் கோவில்கிட்ட ஒரு கிரௌண்ட் இருக்கில்லை... அங்க விளையாடப்போறோம்... மைத்தி,  மாதவன் ஏற்கனவே வந்திருக்கான்... அதனால அவனுக்கு அங்க எப்படி இருக்கணும்ன்னு தெரியும்... நீ இன்னைக்குதான் முதல் முறையா வர்ற அதனால ரொம்ப ஜாகிரதையா இருக்கணும்... பந்து மேல படாம கவனமா இரு சரியா...”

ஒவ்வொருவராக சொல்ல சொல்ல மைத்திக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள்... அவளின் கற்பனை உலகம் விரிந்தது...  ஹிந்துவில் வரும் கிரிக்கெட் செய்திகளும், ஸ்போர்ட்ஸ்ஸ்டார் புத்தகத்தில் வரும் செய்திகளும் கலர் கலராக அவளின் கண் முன் வந்தன... கற்பனை உலகில் சஞ்சரித்தபடியே மைதானத்தை சென்றடைந்தனர்...

“வாடா பத்ரி... என்ன கூட கொசுரெல்லாம் கூட்டிண்டு வந்திருக்க....”

“சீனுண்ணா வீணா என்னை வம்புக்கு இழுக்காத சொல்லிட்டேன்...”

“ஐயோ நான் உன்னை சொல்லல தாயே... மாதுவை சொன்னேன்... இல்லைடா...”, சீனு சொல்ல மாதவன் தலையாட்டினான்...

இவர்களை முறைத்தபடியே அங்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்புகளுடன் பார்த்த மைத்திக்கு சொத்தென்று ஆனது... அவளின் கற்பனை உலக காட்சிகளுக்கு அப்படியே எதிர்பதமாக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.