(Reading time: 9 - 17 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

இருந்தது, நிஜம்...

“பத்ரிண்ணா இது என்ன இத்தனை பேர் விளையாடறா... ஒரு டீம்ல  பதினோரு பேர்தானே...”

“இது என்ன உன்னோட சுப்பிரமணியம் தாத்தாவோட கிரௌண்டா உன் மாமா பையன் மட்டும் வந்து விளையாட... நிறைய டீம் இங்க வந்து விளையாடும்... அவா அவாளுக்கு பகுதி பிரிச்சு இருக்கும்... அங்க நாங்க விளையாடுவோம்....”

“ச்சு பத்ரிண்ணா இது என்ன இத்தனை சின்ன இடம் உங்களுக்கு... நான் ஏதோ பெரிசா இடத்துல விளையாடப்போறேன்னு நினைச்சேன்... நம்ம சித்தி பாட்டியாத்து தோட்டத்தை விட கொஞ்சம் பெரிசு அவ்வளவுதான்...”

கற்பகத்தின் தங்கை இவர்கள் தெருவிலேயே மற்றொரு குடித்தனத்தில் இருக்கிறார்... அவர் இருக்கும் வீட்டின் பின்புறம் பெரிய தோட்டம் இருக்கும்... அங்குதான் சுப்ரமணியத்தின் பேரன், பேத்திகள் விளையாடுவது...  அங்கு பசங்கள் விளையாடும் விளையாட்டை பார்க்கும் ஒரே spectator நம் மைத்திதான்.... மற்ற பெண்கள் அனைவரும் பாண்டி, கண்ணாம்பூச்சி என்று ஆட இவள் கிரிக்கெட் பார்க்க அமர்ந்துவிடுவாள்... அந்த விளையாட்டு அத்தனை ஈர்த்து விட்டது....

“அடுத்த வாரம் சேப்பாக்கத்துல விளையாடலாமா...”, சீனு கேட்க மைத்தி ஆர்வத்துடன் தலையசைத்தாள்....

“டேய் சும்மா இருடா... மைத்திம்மா நீ அங்க ஓரமா உக்கார்ந்துக்கோ... எந்த பக்கத்துல இருந்து வேணா பந்து வரும்... கவனமா இரு...”, பத்ரி அவளை ஒரு ஓரமாக மாதவனுடன் உட்கார வைத்துவிட்டு தன் நண்பர்களுடன்  விளையாட சென்றான்...

சற்று நேரத்தில் மாதவனின் நண்பர்கள் வர அவன் மைத்தியிடம் கவனமாக இருக்க சொல்லிவிட்டு அவர்களிடம் சென்றான்...

தன் கற்பனை உலகம் சரிந்ததில் சற்று வருந்திய மைத்தி சிறிது நேரத்தில் சரியாகி அங்கு விளையாடுபவர்களை கவனிக்க ஆரம்பித்தாள்...

பகுதி பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஐந்தாறு டீம்கள் விளையாடிக்கொண்டிருந்தன.... சிறிது நேரத்திலேயே ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பிக்க ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தாள்... எந்த டீம் அடித்தாலும் இவள் எல்லைக்கு அருகில் இருந்தால் அதை ஓடி எடுத்து கொடுக்க ஆரம்பித்தாள்... முதலில் சற்று எரிச்சலாக பார்த்த மற்ற இடத்தில்  விளையாடும்  பையன்களும் தங்கள் குனிந்து நிமிரும் வேலை குறைந்ததில் அவளையே எடுக்க விட்டார்கள்....

பத்ரியின் டீம் விளையாடிக்கொண்டிருந்த பகுதி இவள் இருந்த இடத்திற்கு அருகில் இருந்தது... அப்பொழுது சீனு விளையாட பத்ரி பந்து வீசினான்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.