(Reading time: 12 - 24 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"ரேச்சல் பீ கேர் ஃபுல்" என்று ஷீலா எச்சரித்தார்.

"ஓகேம்மா" என்று கத்தியவள் வண்டியை கிளப்பினாள்.

மெடிகல் கேம்ப் வாசலில் ஆரம்பித்த அந்த தேரோட்டம் புல்வெளியில் குதிரைபோல தாவி  பறந்து…  மரங்களுக்கு இடையில் புகுந்துபிரதான சாலையை தொட்டுவிட்டு... திரும்பியது.

"நிறுத்துக்கா" என்ற எடியின் குரல் கேட்டு வண்டியை நிறுத்தினாள்.

"என்னடா?"

"அங்கே பாருக்கா"

அவள் பார்த்தாள். அங்கே கல்பி என்ற கல்பனா ஆடி அசைந்து வண்டியில் போய் கொண்டு இருந்தாள். அந்த ஏரியாவின் குயின்டூரிஸ்ட்களுக்கு சாப்பாடு செய்து தருவாள். ட்ரக்கிங் வரும் சுற்றுலா பயணிகளிடம்  அசைவ சமையலுக்கு ஆர்டர் இருக்கும். அவளிடம் அதிக விலை தந்துதான் வாங்குவார்கள்.

செண்பகம் பாட்டி அவ்வளவு விலை போடாது. சுவையும் நன்றாக இருக்கும். ஆனால் ஏஜன்ட்கள் கல்பியிடம்தான் வாங்க வைப்பார்கள்.

 அவளுடைய திறமை அப்படி!.. அவள் கணுக்கால் தெரிய புடவையை மிடி போல கட்டியதைகூட விட்டு விடலாம். மொத்த முதுகும் தெரிய ஜாக்கெட் போட்டு அதை மறைக்காமல் சேலை தலைப்பு காற்றில் அசைய…   அவள் சாப்பாட்டு கூடையை  வண்டியின் கேரியரில் வைத்து   கொண்டு சென்றாள்.

அவளுடைய உடைதான் ரேச்சலை கோபப்படுத்தும். கண்ணியம் என்பது உடையில் இல்லைஅதை அணிகின்ற விதத்தில் இருக்கிறது. அதுதான் மரியாதையை பெற்று தரும்.

அதுவும் இது போன்ற கிராமத்தில் கல்பி போன்று உடை உடுத்தினால் பெண்கள் மத்தியில் மரியாதை இருக்காது.  அவளுக்கு அதுபற்றி கவலையும் இல்லையாராவது புதிதாக கண்ணில் பட்டால் இலவசமாக கோழி குழம்பு தருவாள்சேல்ஸ் ப்ரமோதான்...

[இதை ஏன் இவ்வளவு விஸ்தாரமாக -… தப்பு.. தப்புஅது வடமொழி சொல்லாம்வித்தாரம் என்பதுதான் கரெக்ட்.. - சொல்லுகிறேன் என்றால் கல்பியினால் ரேச்சலிடம் சத்யன் பல்பு வாங்கப் போவதும் டொமஸ்டிக் ஆக்ஸிடெண்ட் நடப்பதும் சைட் ட்ராக் ஸ்டோரியில் பின்னாடி வரும்]

கல்பி யாரையும் சட்டை செய்யாமல் சென்று கொண்டிருந்தாள். நாமாக இருந்தால் அவள் பக்கமே திரும்ப மாட்டோம். ஆனால் ரேச்சல் அப்படியல்ல…!.

 அவளை நல்ல பெண் என்று நினைத்தவர்கள் அந்த எண்ணத்தை இப்போது வாபஸ் வாங்கி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.