(Reading time: 20 - 39 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தொடர்கதை - பிரியமானவளே - 07 - அமுதினி

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி

குளித்து முடித்து வெளியே வந்த தமிழ்செல்வி கடிகாரத்தை பார்த்தாள். நேரம் ஐந்தரை என காட்டியது. குளித்து முடித்த ஈர முடியை எடுத்து நடுவே ஒரு கிளிப் இட்டு அடக்கிய தமிழ்செல்வி, கீழே வந்தாள். இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை. எல்லோரும் கல்யாண வேலையின் களைப்பில் உறங்கி கொண்டிருக்க, சமையல் அறையில் வெளிச்சம் தெரிய, அங்கே சென்றாள்.

பாக்கியம் பாத்திரம் தேய்த்து கொண்டிருந்தார்.

"குட் மார்னிங் " என்று புன்னகையுடன் நின்றவளை பார்த்த பாக்கியம், "வா பாப்பா, சீக்கிரம் எழுந்துட்டியா? டீ போடவா?" என அவசரமாக கழுவி கொண்டிருந்த பாத்திரத்தை வைத்து விட்டு அடுப்பருகே செல்ல, "ஐயோ எதுக்கு அவசரப்படறீங்க பாக்கியம் அம்மா? ஒன்னும் அர்ஜென்ட் இல்லை. உங்க வேலை எல்லாம் முடிச்சிட்டு வந்தா போதும். நான் ஏதாவது பண்ணனுமா?" என்ற தமிழ்செல்வியை பார்த்த பாக்கியம் புன்னகைத்தார்.

"என்னாச்சு? ஏன் சிரிக்கிறீங்க?" தமிழ்செல்வி ஆச்சர்யமாக கேட்க, "இவ்ளோ பெரிய குடும்பத்துல கல்யாணம் பண்ணிட்டு வந்துருக்க, ஆனாலும் நீ மாறல பாப்பா. சந்தோசமா இருக்கு" என்றார் பாக்கியம்.

"இதுல மாற என்ன இருக்கு? எனக்கு புரியல" என்றவள் "சரி அதை விடுங்க. இங்க எல்லாருக்கும் என்ன மாதிரி சாப்பாடு பிடிக்கும்னு சொல்லுங்க. எனக்கு சமைக்க எல்லாம் பெருசா தெரியாது. அட்லீஸ்ட் தெரிஞ்சு வெச்சுக்கலாமே" தமிழ்செல்வி சொல்ல, "ஹ்ம்ம் மருமக பொண்ணு பொறுப்பா இருக்கு" என சிரித்த பாக்கியம், "பெரிய தம்பிக்கு காலைல எப்பவும் ஒட்ஸ், வாழைப்பழம் அப்பறம் முட்டை அப்படிபை தான் சாப்பிடுவாங்க. சின்ன தம்பி அப்படியே எதிர். அவருக்கு பூரி, தோசை அந்த மாதிரி பலகாரம் தான் இஷ்டம். பாட்டிம்மா பத்தி உனக்கே தெரியுமே பாப்பா. அவங்க காலைல சத்து மாவு காஞ்சி தான் குடிப்பாங்க. உனக்கும் உன் தங்கச்சிக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு. இனி அதையும் லிஸ்ட்ல சேர்த்துடலாம்" என பாக்கியம் சொல்ல, "எனக்கு எதுனாழும் ஓகே. இலக்கியா அப்படியே பரத் மாதிரி தான். சோ நீங்க எதுவும் புதுசா செய்ய வேண்டாம்" என்றாள் தமிழ்செல்வி.

தமிழ்செல்வி பேசி கொண்டிருக்க ஒவ்வொரு வேலையாக முடித்த பாக்கியம் காபி போட தயாராக "நான் இன்னைக்கு ஓட்ஸ் வெச்சு ஒரு டிஷ் பண்ணட்டுமா? எப்பவுமே இப்படி கஞ்சியா சாப்டறதை விட நல்லாருக்கும்" என கேட்கவும் "என்ன பாப்பா என்கிட்டே கேட்டுட்டு? உன் வீட்டுக்காரருக்கு நீ பிடிச்சதை பண்ணு. யாரு வேண்டாம்னு சொல்லுவா?" என பாக்கியம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.