சொன்னதோடு மட்டும் அல்லாமல் அவளுக்கு கணக்கு பாடத்தில் நிறைய சூட்சுமங்களையும் சொல்லி கொடுத்தான். தமிழ்செல்விக்கு ஒன்று புரிந்தது. அவன் தன்னிடம் காட்டும் முகமும் மற்றவர்களிடம் காட்டும் முகமும் வேறு என. ஆனால் ஏன்? அன்று அவனை அடித்ததற்காகவா? அவன் பேசியது தவறு என்பதால் தானே அடித்தாள். வேறு ஏதோ காரணம் இருக்குமோ? அப்படி வேறு எதுவும் காரணம் இருக்கும் என்றால் அது என்ன? அவனை அவளுக்கு வேறு எங்கும் பார்த்த பரிச்சயமும் இருக்கவில்லை. எதனால் தன்னிடம் மட்டும் இப்படி நடந்து கொள்கிறான், அதுவும் திருமணம் செய்து பழி வாங்கும் அளவுக்கு என புரியவில்லை அவளுக்கு. ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள். அவன் முகம் எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்கும் பாறை போல இறுக்கி இருந்தது. அவள் வீட்டில் மற்றவருடன் பேசும் போது அவன் அப்படி இருக்கவில்லை என புரிந்தது தமிழுக்கு. ஒரு வேளை தான் அவனுடன் வருவதால் தான் இப்படி இருக்கிறான் போல என எண்ணியவளுக்கு, அப்படி அவளை வெறுக்கும் ஒருவன் எதற்கு இப்படி ஒரு திருமணத்தை செய்து கொண்டு கஷ்டப்படவேண்டும் என்று புரியவில்லை. அவனை பற்றியே யோசிக்கிறாயே தமிழ்?? உனக்கு கஷ்டம் இல்லையா? அவளின் மனம் அவளை எதிர் கேள்வி கேட்டது.
"என்ன மேடம் என்னையே இப்படி முழுங்கற மாதிரி பாக்கற....என்ன எப்படி இவனை கவுக்கலாம்னு யோசிக்கிறியோ?" சட்டென ராம் கேட்கவும் தான் இத்தனை நேரம் அவனையே பார்த்து கொண்டிருந்ததை உணர்ந்தாள் தமிழ்.
"உங்களுக்கு ரொம்ப ஓவர் கான்பிடென்ஸ். நான் உங்களை கவுக்கணும்னு நினைக்கிற அளவுக்கு நீங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஹண்ட்ஸம் அண்ட் கூல் பெர்சன் ஒன்னும் கிடையாது" என்றாள் முகத்தை திருப்பி கொண்டு.
"ஒஹ்ஹஹா நீ பெரிய உலக அழகியா?" -ராம் கோவமாக சொல்ல,
"நான் உலக அழகினு சொல்லவே இல்லையே. நீங்க தான் பெரிய ஹீரோன்னு நினைச்சுகிட்டு உங்களை பத்தியே பெருமையா பேசிக்கிறிங்க" அவள் அவனிடம் வாயாட,
"எனக்காக எத்தனை பேரு காத்துட்டு இருக்காங்க தெரியுமா? " ராம் சொல்ல, "அப்பறம் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்படி கத்திட்டு இருக்கீங்க?" தமிழ்செல்வி கேட்க, "அ...அது...அது உன்னை பழிவாங்க?" என்றான் ராம்.
அதற்குள் வீடு வரவும் கதவை திறந்து இறங்க போனவள் அவனை திரும்பி பார்த்தாள்.
"எலியை பிடிக்க வீட்டை யாராவது கொளுத்துவங்களா?" என்று விட்டு வண்டியை விட்டு இறங்கியவள் வேகமாக வீட்டிற்குள் செல்ல, அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்தவன் "திமிரு பிடிச்சவ" என கோவமாக ஸ்டியரிங்கில் ஓங்கி குத்தினான்.