(Reading time: 20 - 39 minutes)
Priyamaanavale
Priyamaanavale

வெச்சவன் நீ" என பரத் கிண்டல் செய்ய, எல்லோர் முன்னாலும் ஒரு சிரிப்பு சிரித்து வைத்தவன் வேறு எதுவும் பேச முடியாமல் அந்த பான் கேக்கை பிட்டு வாயில் வைத்தான்.

எல்லோரும் சாப்பிட்டு முடிக்கவும் "பத்தரைக்கு நல்ல நேரம். சோ அப்போ கிளம்பலாம். எல்லாரும் போயி ஒரு அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கெளம்பி வாங்க" என்றார் விசாலம் பாட்டி.

பாட்டிக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளை கொடுத்து விட்டு தனது அறைக்குள் வந்தாள் தமிழ்செல்வி.

அங்கிருந்த கட்டிலில் அமர்ந்திருந்த ராமை பார்க்காதது போல அங்கிருந்த கப்போர்ட அருகே சென்றவள் அவளுக்கான உடையை எடுத்து கொண்டிருக்க,

"இந்த மாதிரி பான் கேக் எல்லாம் செஞ்சு கொடுத்து என்னை இம்ப்ரெஸ் பண்ணலாம்னு ட்ரை பண்றியா?" திடீரென ஒரு குரல் அருகே கேட்கவும் பதறி போனவள் திரும்ப, அவளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ராமின் மேல் இடித்து கொண்டவள் தடுமாறி பின்னால் சாய போக, அவளின் தோள்பட்டையை பிடித்து நேராக நிறுத்தியவன், "என்ன நான் கேட்டுட்டு இருக்கேன். நீ டான்ஸ் ஆடிட்டு இருக்க?" எனவும், "எ...என்ன கேட்டிங்க?" என்றாள் தமிழ்செல்வி.

"பான் கேக் கொடுத்து என்னை இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்றியான்னு கேட்டேன்?" ராம் மீண்டும் கேட்க, "நீங்க என்ன சின்ன பாப்பாவா? லாலிபாப் கொடுத்து கூட்டிட்டு போற மாதிரி பான் கேக் கொடுத்து இம்ப்ரெஸ் பண்ண. நீங்க இவ்ளோ வீக்கா? நான் கூட என்னமோ நெனைச்சேன்." என்றாள் தமிழ்.

"என்ன...என்ன நினைச்ச?" ராம் அவளின் தோள்பட்டையை பிடித்திருந்த பிடியை விலக்காமல் கேட்க, "ஏதோ நெனைச்சேன். நான் என்ன நெனைக்கறேன்னு உங்களுக்கு எதுக்கு தெரியணும். எனிவெ உங்களுக்கு என்னை கண்டா பிடிக்காது. அப்பறம் எதுக்கு என்னோட ஒப்பீனியன் எல்லாம். கொஞ்சம் கையை எடுத்திங்கனா நான் அந்த பக்கம் போவேன்" என தமிழ்செல்வி சொல்லவும், அப்போது தான் அவள் மேல் இருந்த பிடியை உணர்ந்தவன் டக்கென தன்னுடைய கைகளை நகர்த்தி கொண்டு அவளிடம் இருந்து விலகி நின்றான்.

தன்னுடைய உடையை எடுத்து கொண்டு அங்கிருந்த இன்னொரு அறைக்குள் அவள் நுழைய, அவளை முறைத்து கொண்டே வந்து அமர்ந்தவன், "என்னை நெனைச்சிருப்பா?" என யோசித்தான்.

அடுத்த அறைக்குள் நுழைந்தவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய பிசினெஸ் மென், தலை முதல் கால் வரை ஈகோ எல்லாம் இருந்தும் ஏதோ சின்ன

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.