(Reading time: 20 - 39 minutes)
Priyamaanavale
Priyamaanavale

மடியில் தலையணையை வைத்து கொண்டு பூம் பூம் மாடு போல தூக்க கலக்கத்துடன் தலையாட்டி கொண்டிருந்தான் பரத். அவன் அருகே அமர்ந்து சாமியாடி கொண்டிருந்தாள் இலக்கியா.

"உங்க பாட்டி எப்படி என்னை திட்டலாம்? அதுவும் அந்த வேலைக்கார அம்மா முன்னாடி. அப்போ எனக்கு இந்த வீட்ல ஒரு மருமகளா என்ன மரியாதை இருக்கு? நான் ஒரு சாதாரண குடும்பத்துல இருந்து வந்ததால தான இப்படி எல்லாம் பேசறாங்க?" என்றவளை அதற்க்கு மேல் சமாதான படுத்த தெரியாமல் எப்போதும் எடுக்கும் ஆயுதத்தை எடுத்தான் பரத்.

"டார்லிங், நீ என்ன இந்த வீட்டு கெஸ்ட்டா? யு ஆர் தி பிரின்சஸ் ஆப் திஸ் பேமிலி. பாட்டிம்மா அப்படி சொன்னா அது பாக்கியம் அம்மாவை சமாதானப்படுத்த சொல்லிருப்பாங்க. பாட்டிக்கு உன் மேல பயங்கர நம்பிக்கை. நீ ரொம்ப ஸ்போர்ட்டிவ்வான பொண்ணுஅப்படினு சொன்னாங்க" அவன் ஒரு ஆகாச பொய்யை சொல்ல, "நிஜமாவா?"என்றாள் இலக்கியா சற்றே கோவம் தணிந்தவளாக.

"பின்ன இல்லையா? நீ பிரின்சஸ்நா பாட்டி இந்த வீட்டோட ராஜமாதா. நீ அவங்களை கொஞ்சம் அடஜஸ்ட் பண்ணிக்கிட்டா போதும் நீ தான் அடுத்த மஹாராணி" சொன்னவன் அவள் முகத்தை பார்த்தான். அதில் தெரிந்த பிரகாசத்தை கண்டவன் மனதிற்குள் சிரித்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

எல்லோரும் டைனிங் டேபிளில் வந்து அமரவும் பாக்கியமும் தமிழ் செல்வியும் எல்லோருக்குமான காலை உணவை எடுத்து வைத்தனர்.

"பாப்பா, நீ உக்காரு. நான் பரிமாறுறேன்" என பாக்கியம் சொல்லவும் "ஆமாம் செல்வி நீ உக்காரு. கல்யாணம் ஆனா முதல் நாள் உன் புருஷன் பக்கத்துல உக்காந்து சாப்பிட்டு" என விசாலம் பாட்டி சொல்லவும் தலையசைத்து விட்டு அவனுக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

"எனக்கு எப்பவும் ஓட்ஸ், முட்டை அண்ட் பழம் தான சொல்லிருந்தேன். இன்னைக்கு என்ன ஏதோ தோசை மாதிரி இருக்கு" ராம் கேட்க, "இல்லை தம்பி. இதுவும் ஓட்ஸ், பழம், முட்டைல பண்ணுனது தான். இது பேரு கூட....என்னமோ சொன்னாங்களே" என யோசித்த பாக்கியம் "ஏன் பாப்பா இது பேரு என்ன சொன்ன?" என தமிழ்செல்வியை கேட்க, விழுங்கிய உணவு தொண்டைக்குள் சிக்கி கொண்டது தமிழ்செல்விக்கு.

"அ...அது பேரு பான் கேக். நெட்ல பார்த்தேன்" என தமிழ்செல்வி சொல்ல, "பார்த்தியா அண்ணா, உனக்காக அண்ணி புது புது ரெசிபி எல்லாம் கண்டுபிடிச்சு சமைக்கறாங்க. கொடுத்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.