(Reading time: 20 - 39 minutes)
Priyamaanavale
Priyamaanavale

குழந்தையை போல அவன் கேட்ட கேள்வியை எண்ணி அவளால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அவன் அவளிடம் என்ன எதிர்பார்க்கிறான் என அவளுக்கு தெளிவாக புரிந்தது. அவள் அவனிடம் மண்டியிட வேண்டும். அவள் அவனை கவர முயல வேண்டும், அவனுக்காக, அவனுடன் வாழ்வதற்காக அவள் கெஞ்சவேண்டும், இதெல்லாம் நடந்தால் அவனுடைய ஈகோ திருப்தியடையும். ஆனால் அவளுக்கு இருக்கும் சுயமரியாதை அவளை இதெல்லாம் செய்ய விடுமா என்ன??? பார்க்கலாம் என்னதான் செய்வார் என எண்ணியவள் நேரம் போவதை உணர்ந்து கிளம்ப தயாரானாள்.

"அம்மா நாங்க கெளம்பறோம்மா. உடம்பை பார்த்துக்கோங்கம்மா. காவ்யா வரேன்" இலக்கியா இருவரிடமும் விடைபெற்று வெளியே கார் அருகே நின்று கொண்டிருந்த பரத்திடம் செல்ல, அதுவரை அவர்கள் பேசுவதை நின்று ஒரு புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த தமிழ்செல்வி, கலைவாணியின் அருகே வந்தார்.

"தமிழ், சந்தோசமா இருக்கியா? கேக்கணும்னு நினைச்சிட்டே இருந்தேன். ஆனா எல்லாரும் இருந்ததால கேக்க முடியல. இலக்கியா விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டா. அதுவும் இல்லாம அவளுக்கு வேணும்கறதை எப்படியாவது சாதிச்சுக்குவா. ஆனா நீ சூழ்நிலை காரணமா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட. நீ சந்தோசமா தான இருக்க தமிழ்? மாப்பிளை நல்ல குணமா இருக்காரு. எந்த பந்தாவும் இல்லாம பேசறாரு. உன்கிட்ட நல்லபடியா இருக்காரு தான?" கலைவாணி கவலையுடன் கேட்க "அம்மா நான் சந்தோசமா இருக்கேன். நீங்க எதை பத்தியும் கவலைப்படாதீங்க. காவ்யாவை பார்த்துக்கோங்க. நான் டெய்லி போன் பண்றேன். அடிக்கடி வீட்டுக்கு வந்து பார்த்துக்கறேன். அப்பறம் நான் அன்னைக்கே சொன்ன மாதிரி டியூஷன் எல்லாம் எடுக்காதிங்க. பணத்தை பத்தி கவலைப்படாதீங்க. நான் நல்லா இருக்கேன். சரிம்மா. ரொம்ப நேரமா வெளிய வெயிட் பண்றங்க. நான் போயிட்டு வரேன்" என கலைவாணியிடம் விடைபெற்று கொண்டு கிளம்பினாள் தமிழ்செல்வி.

விசாலம் திருமண வேலைகளால் ஓய்ந்து போயிருந்ததால் கடைசி நிமிடத்தில் இரு ஜோடிகளை மட்டும் அனுப்பியிருந்தார். இலக்கியாவும் பரத்தும் முன்னால்வேறு காரில் செல்ல, தமிழ் வந்ததும் ராம் காரை கிளப்பினான்.

கலைவாணி சொன்னது போல, அவரிடமும் காவ்யாவிடமும் நன்றாகவே பழகினான் ராம். அன்று அவளிடம் சண்டை போட்டது போல லோ க்ளாஸ் ஹை க்ளாஸ் என அவன் எண்ணவில்லை என்பது அவனின் நடத்தையிலேயே தெரிந்தது. தமிழுக்கு கூட தெரியவில்லை அவன் காவ்யாவிற்காக ஒரு அழகான விலை உயர்ந்த பேனாவை வாங்கி வந்திருந்தான் பரிசாக. அவளின் பொது தேர்வை அவள் இதில் எழுத வேண்டும் என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.