(Reading time: 10 - 20 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

அப்பொழுதுதான்  உணர்ந்தாள் மைத்தி... அவள் திருதிருவென்று முழித்தபடியே அனைவரையும் பார்க்க... கீழே சத்தமாக இருக்கவும் என்னவென்று பார்க்க இறங்கிய காமாட்சி பாட்டி பார்த்தது முழித்தபடி இருந்த பேத்தியையே....

“கேட்டதுக்கு பதில் சொல்லு மைத்தி.... அவர நீ எங்க பார்த்த...”

“அது தாத்தா....”, மைத்தி பயத்துடன் இழுத்தாள்...

“அது நான்தான் குழந்தையை விளையாட பீச்சுக்கு அனுப்பினேன்....”, காமாட்சி பாட்டி சொல்ல, அவரிடம் நேரடியாக பேச முடியாது தாத்தா கற்பகம் பாட்டியை பார்த்தார்...

“என்ன மாமி இது... எதுக்கு நீங்க அனுப்பினேள்... இப்போ திரும்பவும் கிரிக்கெட் விளையாடறேன்னு ஆரம்பிக்கறா பாருங்கோ...”, கற்பகம் பாட்டி தன் பிடித்தமின்மையை காட்டினார்...

“இல்லை கற்பகம்... குழந்தை பாவம் ரெண்டு வாரமா விளையாடாம ஏங்கி போய்டுத்து...  சரி போயிட்டு வரட்டுமேன்னுதான் அனுப்பினேன்....”

“இன்னையோட சரி மைத்தி.... இந்த விளையாட்டெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு படிக்கற வழியைப் பாரு... சாயங்காலம் பொழுது போகலைன்னா சொல்லு பக்கத்து தெருவுல ஒரு மாமி படம் வரைய சொல்லித் தராளாம்... அதுல  சேர்த்து விடறேன்....”, தாத்தா கண்டிப்பான குரலில் சொல்ல, மைத்தி தன் தாய், தந்தையை பரிதாபமாக பார்த்தாள்...

“மாமா அவளுக்கு எது பிடிக்கறதோ அதுல கொஞ்ச நாள் சேர்த்துத்தான் பார்ப்போமே....”, தன் மச்சினர் பிள்ளைகள் மைத்திகாக வரிந்து வரிந்து பேசுவதை கேட்டு மனம் சற்று மாறியிருந்த அனந்து  தன் மாமனாரிடம் கூறினார்...

“அதெல்லாம் சரிப்படாது மாப்பிள்ளை... சும்மா காசு பிடுங்கறதுக்காக பண்ற வழி...”, தாத்தா சொல்ல, மைத்தி இப்பொழுது தன் பாட்டியை பார்த்தாள்....

“அப்படி தெரியலை மாமா.... அங்க எத்தனையோ பேர் விளையாடறா... எல்லாரண்டையும் அவர் கேக்கலையே.... ரகு சொல்றதை பார்த்தா அந்த கோச் கொஞ்சம் பேர் வாங்கினவர் போலத்தான் தெரியறது... அவருக்கு என்ன முடை... நம்மக்கிட்ட வந்து கேக்கணும்ன்னு .... அவர் சொல்ற இடமும் பெரிய இடம்தான்... அங்க சேர இடம் கிடைக்கறதே பெருசுன்னுதான் சொல்றா.... மைத்திக்கும் இத்தனை ஆர்வம் இருக்கும்போது அதை ஏன் தடுக்கணும் மாமா...”, கண்ணன், ரகு, பத்ரி என்று அனைவரும் மைத்திக்காக பேசுவதை பார்த்து அனந்து மைத்தியை அங்கு சேர்க்கும் முடிவுக்கு வந்திருந்தார்.....

“மாப்பிள்ளை நேக்கு இதுல விருப்பம் இல்லை... அப்பறம் உங்களோட இஷ்டம்.....”

“மாமா கோவப்படாதீங்கோ... நாம ஒரு ஒருத்தருக்கும் சின்ன வயசுல ஒரு கனவு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.