(Reading time: 10 - 20 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

இருந்திருக்கும்... ஆனா அது நடக்காதப்போ எத்தனை கஷ்டப்பட்டிருப்போம்... உதாரணத்துக்கு  என்னையே எடுத்துக்கோங்கோ... நான் படிக்கும்போது அத்தனை விளையாட்டிலையும் முதல்ல வருவேன்... கால்பந்து அவ்ளோ நன்னா விளையாடுவேன்... படிக்கும்போது நான்தான் கேப்டன்....  தமிழ்நாட்டு லெவல்ல விளையாடணும்ன்னு கனவெல்லாம் கண்டேன் ... ஆனா குடும்ப கஷ்டம் அது கனவாவே போய்டுத்து.... சராசரி குடும்பஸ்தனா வேலைக்கு போயிண்டு இருக்கேன்.... இன்னை வரைக்கும் எனக்கு அந்த வருத்தம் இருக்கு.... என்னை மாதிரி மைத்தி வருத்தப்பட வேண்டாமே.... எதிர்காலத்துல மைத்தி பெரிய கிரிக்கெட் ப்ளேயரா வரலாம், வராம போகலாம்... அது காலத்தோட கையில... ஆனா அதுக்கான முயற்சியை   நாம எடுக்கலாமே....”, அனந்து நீளமாக பேச இன்னும் தாத்தாவின் மனநிலை மாறவில்லை....

“எல்லாம் சரி மாப்பிள்ளை... ஏற்கனவே குடும்பம் இழுத்துக்கோ, பிடிச்சுக்கோன்னுதான் ஓடறது.... இன்னும் ஒரு ஏழெட்டு வருஷத்துல மைத்திக்கு கல்யாணத்துக்கு பார்க்கணும்... அதுக்கு இப்போலேர்ந்தே குருவி சேர்க்கறா  மாதிரி சேர்த்தாத்தான் உண்டு... நாம என்ன டாட்டா, பிர்லாவா... பணத்தை அனாவஸ்யமா செலவழிக்க.... நீங்களே சொல்றேள், அந்த அகாடமி ரொம்ப பேர் வாங்கினதுன்னு.... மாசமானா பீஸ் கட்ட என்ன பண்ணப்போறேள்...”

“பார்க்கலாம் மாமா.... மொதல்ல அங்க போய் விசாரிக்கலாம்... நம்ம பட்ஜெட்க்குள்ள வராதான்னு பார்க்கலாம்... அகலக்கால் எல்லாம் வைக்க மாட்டேன்...”, அனந்து கூற மனசில்லா மனசுடன் ஒப்புதல் கொடுத்தார் தாத்தா...

ஒருவாறு தாத்தாவின் ஒப்புதல் கிடைத்தவுடன் மைத்தியின் முகம் ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் அடைந்தது....

“தேங்க்ஸ் தாத்தா... என்னை கிளாஸ்ல சேர்க்க ஒத்துண்டதுக்கு....பாருங்கோ நான் அங்க சேர்ந்து எத்தனை பெரிய ப்ளேயாரா வரப்போறேன்னு....”

“இங்க பாருடி குட்டி... உங்கப்பா மொதல்ல அங்க பணம் பத்தியெல்லாம் விஜாரிக்கத்தான் போறா.... எல்லாம் தோதுப்பட்டு வந்தாத்தான் உன்னை சேர்ப்போம்... அதனால இப்போலேர்ந்தே மனசுல எந்த ஆசையையும் வளர்த்துக்காத... சேரலைன்னா உனக்குத்தான் ஏமாத்தமா போய்டும்...”, அவளை எச்சரித்தபடி தாத்தா அங்கிருந்து நகர்ந்தார்... அனைவரும் அவர் அவர் ஜாகை அடைய பத்ரியும், ரகுவும் மேலே மைத்தியின் ஜாகைக்கு வந்தார்கள்...

“தேங்க்ஸ் அத்திம்பேர்.... மைத்தியை அங்க சேர்க்க ஒப்புத்துண்டதுக்கு....”

“நான்தாண்டா தேங்க்ஸ் சொல்லணும்.... மைத்திக்காக இத்தனை தூரம் பரிஞ்சுண்டு வரேளே.... ஆனா தாத்தாக்கு இன்னும் இதுல விருப்பம் இல்லை போல இருக்கு... அவரோட முகமே சரியில்லை....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.