(Reading time: 17 - 34 minutes)
Unakkum Enakkum thaan porutham
Unakkum Enakkum thaan porutham

உண்பது முடியாது. அப்போது சுகன்யாவின் அப்பா அவர்கள் வீட்டில் வேலைக்குச் சேர்ந்திருக்கவில்லை. அதனால் சுகன்யாவும் பழக்கமாகவில்லை. அவள் தனியாகத்தான் காரில் சென்று வருவாள்.

அவள் செல்லும் காரின் ஓட்டுநர் அவளிடம் மிகவும் பிரியமாக இருப்பான். அவள் ஆசைப்படுகிறாள் என்பதற்காக அவனே ஐசை வாங்கித்தந்து அதை அவள் சாப்பிட்டு முடிக்கும் வரையில் காத்திருந்து அதன் பிறகு  காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவன் தன்னுடைய காசிலேயே வாங்கித்தருவதால் வீட்டினருக்கும் தெரியாமல் போய்விட்டது.

வீட்டில் அவன் ஐஸ் வாங்கித்தருவதைக் கூறினால் அவன் வேலை போய்விடும் என்று அவன்  அவளிடம் வீட்டினரிடம் கூறக்கூடாது என்று சொல்லிவிட்டான். மகாலட்சுமிக்கும் உண்மை தெரிந்தால் அம்மா திட்டுவாளோ? என்ற பயம். அதனால் அவளும் சொல்லவில்லை.

ஒருநாள் அப்படி ஐஸ் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் அவள் அந்த வலியை தலையில் உணர்ந்தாள்.

நிமிர்ந்து பார்த்தபோது வெடவெடவென்று ஒல்லியான தேகத்துடன் உயரமாய் அவன் நின்றிருந்தான்.

அவனை அவள் அதற்கு முன்பு பார்த்திருக்கிறாள். சில சமயம் அவள் தன்னைப் பார்க்கிறாள் என்று தெரிந்தால் அவளை பார்வையாலேயே மிரட்டியிருக்கிறான். அதனால் அவனைக் கண்டாலே அவள் மறைந்துகொள்வாள். இப்போது அவன் எதற்கு வந்து தன்னை தலையில் கொட்டுகிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. தலையை வலித்தது. தடவிக்கொண்டாள். கண்களில் கண்ணீர் வழிந்தது. அருகில் அமர்ந்திருந்த ஓட்டுநரைப் பார்த்தாள். அவனையும் காணவில்லை.

"அய்யோ. எப்படி வீட்டுக்குப் போறது?" கவலையுடன் கையைப் பிசைந்து கொண்டு நின்றாள்.

"என்ன நிற்கிறே? காரில் ஏறு."

அதட்டலாகக் கூறினான். அவள் பயந்துகொண்டே காரில் ஏறினாள். அவன்தான் காரை ஓட்டினான்.

வீட்டுக்குப்போன உடனே தாத்தாவிடம் அவன் தன் தலையில் கொட்டியதை சொல்லி அவனை அடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். அவள் தாயிடம் கூறினால் அவள் அதை கேட்கமாட்டாள். இவள்தான் ஏதோ தவறு செய்திருப்பதாக அம்மா கூறுவாள் என்று அந்த வயதிலேயே மகாலட்சுமி நன்கு உணர்ந்திருந்தாள்.

வீடு வரட்டும். தாத்தாவிடம் மாட்டிவிட வேண்டும். மனதிற்குள் கறுவிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

"என்ன மகாராணிக்கு கார்க்கதவைத் திறந்துவிடனுமா? கீழே இறங்கு." அதட்டலான குரல் கேட்டதும்தான் வீடு வந்ததை அவள் உணர்ந்தாள்.

அவளை இது மாதிரி யாருமே திட்டியதில்லை. யாராவது குரலை உயர்த்திப் பேசினாலே அவள் பதட்டமாகிவிடுவாள். அந்தளவிற்கு மென்மையானவள். அவன் அதட்டலில் அவள் கண்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.